- Saturday
- August 15th, 2026
அவசரகாலச்சட்டம் இல்லாத ஒரு சூழ்நிலையில் சுடுவதற்கான அதிகாரங்களை பொலிஸ் எங்கிருந்து பெற்றுக்கொண்டது – சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா – அல்லது சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்.பல்கலைகழக மாணவர்களின் கொலை சம்பவம் தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளியிட்டுள்ள...
கேலிச்சித்திர ஓவியரான அஸ்வின் சுதர்சனின் இறுதிக் கிரியைகள் இன்று அவரது சொந்த இடமான மாதகலில் நடைபெறவுள்ளது. கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் என அழைக்கப்படும் யாழ்ப்பாண மாவட்டம், மாதகலைச் சேர்ந்த சிரேஷ்ட காட்டூன் ஊடகவியலாளரான அஸ்வின் சுதர்சன் கடந்த 22ஆம் திகதி உக்கிரைன் நாட்டில் திடீரென ஏற்பட்ட வயிற்று வலியாலும் போதிய சிகிச்சை அளிக்கப்படாமையாலும் மரணமடைந்தார். இவரின் பூதவுடல்...
யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இதேவேளை இந்த இளைஞர்களின் மரணம் தொடர்பில் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு, இச்சம்பவம் தொடர்பில்...
வடக்கில் கடற்மையாற்றும் காவல்துறையினருக்கு துப்பாக்கியால் சுடும் அதிகாரத்தை வழங்கியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வடக்கில் பணியாற்றும் காவல்துறையினருக்கு சுடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் யாழப்பாணத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பானது தெற்கில் இடம்பெறும் சாதாரண இறப்புக்கள் போன்றதே என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்துக் காரணமாக உயிரிழந்துள்ளனர் என முதலில் தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தினாலே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. பின்னர் இச்சம்பவம் தொடர்பாக 5 காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதுகாப்புச்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றாம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான நடராசா கஜன், பவுண்ராஜ் சுலக்ஷன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொழுது கொக்குவில், குளப்பிட்டிச் சந்திக்கருகாமையில் காங்கேசன்துறை வீதியில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிக் கொல்லப்பட்டிருப்பதான...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றுகாலை அவர்கள் ஐந்து பேரும் யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி சதீஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் அவர்கள் ஐந்து பேரையும் அநுராதபுரம்...
யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு கலகம் அடக்கு பொலிஸாரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக வெளிவந்த தகவலையடுத்து, இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்ததாக முன்னர் கூறப்பட்டு, பின்னர் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு...
மீள்குடியேற்ற அமைச்சிற்கு உட்பட்ட பனை அபிவிருத்தி சபையின் விரிவாக்கல் பிரிவு ஏற்பாடு செய்திருந்த 'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' என்ற தொனிப்பொருளில் பனைசார் உற்பத்திகளின் தேசிய கண்காட்சி யாழ் மத்திய கல்லூரி வளாகத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. பனை அபிவிருத்தி சபையின் தலைவர் வைத்திய கலாநிதி இ.சிவசங்கர் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது. இதன் போது மீள்குடியேற்றம்...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து பக்கச்சார்பற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவே வடபகுதி மக்கள் குழப்பமடையக்கூடாது என்றுசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர்மேலும் தெரிவிக்கையில் மோட்டார்சைக்கிளில் சென்ற இரு பல்கலைக்கழக மாணவர்கள் விபத்துக்குள்ளாகி மரணமானதாக தெரிவிக்கப்பட்ட போதும் அவர்களது மரணம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருந்தன. இந்த...
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்...
ஹபராதுவ, லியனகொட, லுனுமோதல வீதியை இரண்டு அமைச்சர்கள் திறந்து வைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வீதியின் ஒரு பகுதியை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும், மற்றைய பகுதியை நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவும் திறந்து வைத்துள்ளனர். ஹபராதுவ ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சந்திரலால் அபேகுணவர்த்தனவினால் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர்...
கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியானதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, உடற்கூற்று பரிசோதனை இடம்பெறும் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்ற தகவலினால் ஆத்திரமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள், வைத்தியசாலை வளாகத்தில் சூழ்ந்தனர். இதனையடுத்து,...
இந்திய அமைதிப்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 21 வைத்தியசாலை பணியாளர்களின் 29ஆவது நினைவுதினம், இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த 21 பேரும் கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இன்றைய தினத்தில் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படையினர், வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68...
கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் நேரம் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது. அத்துடன், விபத்து நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பொலிஸார் நடமாடியுள்ளனர். இந்தத் தகவலினால், மாணவர்களின்...
48 வகையான மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பாக வர்த்தமானியில் வௌியிடுவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் கையொப்பமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நீரழிவு, இரத்தச் சோகை உள்ளிட்ட சில நோய்களுக்கான மருந்துகள் உட்பட 48 வகையான மருந்துகளுக்கான விலை குறைக்கப்படவுள்ளது. விலை குறைப்பு காரணமாக...
வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவுடன் கலந்துரையாடி, இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல்...
யாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம்வருட மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசாசுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே...
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் இரண்டு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியபோது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் மன்னிக்க முடியாத பாவச் செயல் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். இத்தகைய விபத்து மரணங்கள் ஏற்படாத வண்ணம் பேரூந்து சாரதிகளுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். திருநெல்வேலி...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகன் முறையான உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவருமான உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதிமோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவால் நேற்று (வியாழக்கிழமை) இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மிக் ரக விமானக் கொள்வனவின் போது பாரிய...
Loading posts...
All posts loaded
No more posts
