Ad Widget

யாழ்ப்பாணத்தில் பனைசார் உற்பத்திகளின் தேசிய கண்காட்சி

மீள்குடியேற்ற அமைச்சிற்கு உட்பட்ட பனை அபிவிருத்தி சபையின் விரிவாக்கல் பிரிவு ஏற்பாடு செய்திருந்த ‘ஞாலத்தில் புதுமை புகும் தாலம்’ என்ற தொனிப்பொருளில் பனைசார் உற்பத்திகளின் தேசிய கண்காட்சி யாழ் மத்திய கல்லூரி வளாகத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

palmera-exbiti

பனை அபிவிருத்தி சபையின் தலைவர் வைத்திய கலாநிதி இ.சிவசங்கர் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது. இதன் போது மீள்குடியேற்றம் , புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பனைசார் உற்பத்தியாளர்களின் உற்பத்திப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவை தொடர்பான விளக்கங்களும் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

கடந்த இருபத்தைந்து வருடங்களாக பனை அபிவிருத்தி சபையில் கடமையாற்றிவரும் அதிகாரிகளுக்கு அமைச்சரினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புதிய தொழில் முயற்சியாளர்களும் இனம் காணப்பட்டு அவர்களின் தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் காசோலைகளும் வழங்கப்பட்டது

யாழ் பல்கலைகழக துணைவேந்தர் செல்வி.வசந்தி அரசரட்ணம் பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் பசுபதி சீவரட்ணம் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts