சுன்னாகம் விவகாரம்: அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம்

சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த பொலிஸார் இருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகடுகள் இன்றி, முகங்களையும் துணியால் மறைத்தபடி வந்தவர்களே இவ்வாறு வாள் வெட்டை மேற்கொண்டுள்ளனர் எனத்...

துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி, இருவர் படுகாயம்

மட்டக்குளிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
Ad Widget

பூரண ஹர்த்தாலுக்கு ஒத்துழைக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை

வடமாகாணம் முழுவதும் நாளை செவ்வாயக்கிழமை (25-10-2016) நடைபெறவுள்ள பூரண ஹர்தாலுக்கு ஒத்துழைக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வியாழக்கிழமை (20-10-2016) இரவு ஸ்ரீலங்கா பொலீசாரினால் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் ஏற்பாட்டில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு...

மாணவர்களின் கொலை தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும்-பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

மாணவர்களின் கொலை தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும்  எனபல்கலைக்கழக ஊழியர் சங்கம் கோரியுள்ளது அவர்களது அறிக்கை வருமாறு கடந்த வெள்ளிக்கிழமை(20-10-2016) இரவு கொக்குவிலில் இரண்டு யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் மூலம் கொல்லப்பட்டமையானது எமக்கும் யாழ் சமூகத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தினையும் வேதனையையும் தருகின்றது. நல்லாட்சி அரசு என்கின்ற பெயரில் ஆட்சி...

வடக்கில் செவ்வாய்க்கிழமை பூரண ஹர்த்தால்.-தமிழ் அரசியல் கட்சிகள் அழைப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து வடக்கில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்திருக்கின்றன. இதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை திங்கட்கிழமை போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் மேற்படி கர்த்தால் அழைப்பும் வெளிவந்துள்ளது. 1.இலங்கை தமிழரசுக் கட்சி 2.தமிழீழ விடுதலை இயக்கம் 3.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி...

வாள் வெட்டுக்குழு என நினைத்தே சுட்டோம் என்கிறது பொலிஸ் தரப்பு

வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். என யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரேனிஸ்லாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்துமாறு சைகை காட்டிய போது அவர்கள் நிறுத்தவில்லை. அதனால் வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள்...

பொலிஸாரின் வரம்பு மீறிய செயற்பாடுகளை ஏற்க முடியாது ; வட மாகாண சபை

குற்றங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பொலிஸாரின் வரம்பு மீறிய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என வட மாகாண பதில் முதலமைச்சர் த. குருகுலராசா மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சி. தவராசா ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். அவசரகாலச்சட்டம் அமுலில் இல்லாத நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்திக் கொலை செய்த சம்பவத்தை, ஏற்றுக்...

மரணவீட்டில் அரசியல் செய்ய வேண்டாமென எச்சரிக்கை!!

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரான கிளிநொச்சி, 155ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான நடராஜா கஜன் என்ற மாணவனது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவனது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று முற்பகல் கிளிநொச்சி – பாரதிபுரத்தில் அமைந்துள்ள மாணவனது இல்லத்தில் இடம்பெற்றது. மாணவனது...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலைகள் எவ்வகையிலும் நியாயப்படுத்தப்படமுடியாது

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர் தாயகத்தில் உயிர்களுக்கான மதிப்பும் பாதுகாப்பும் எந்த நிலையில் தொடர்ந்தும் இருக்கிறது என்பதை மீண்டும் வெளிக்காட்டியிருக்கிறது என தெரிவித்துள்ள தமிழ் மக்கள் பேரவை, இந்த கொலைகள் தொடர்பில் கடுமையான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளதுடன், நீதியான விசாரணை ஒன்று நடாத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது. இது தொடர்பில் தமிழ்...

வடக்கின் பாரம்பரிய உணவுகள் பண்பாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்கும்- பொ.ஐங்கரநேசன்

வடக்கை நோக்கி சுற்றுலாப் பயணிகளை வசீகரிப்பதில் எமது இயற்கைச் சூழலும் தொல்லியற் சின்னங்களும், வணக்கத்தலங்களும் பெரும் பங்காற்றுகின்றன. அந்தப் பங்களிப்புக்கு நிகராக எமது பாரம்பரிய உணவுகளும் பங்களிக்க முடியும். வடக்கின் பாரம்பரிய உணவுகள் பண்பாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சர் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (22.10.2016)...

சேதமடைந்த பணத் தாள்களை வாங்காதீர்- மத்திய வங்கி எச்சரிக்கை

தேவையற்ற விதத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ள அல்லது திரிபுபடுத்தப்பட்டுள்ள நாணயத் தாள்களை பொறுப்பேற்பதை தவிர்ந்து கொள்ளுமாறும் அவ்வாறு பொறுப்பெற்பவர் நஷ்டமடைய வேண்டியேற்படும் எனவும் மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற பணத் தாள்களுக்கு மத்திய வங்கியினால் எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்பட மாட்டாது எனவும் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், கொடுக்கல், வாங்கல் செய்யும்போது இவ்வாறான பணத்தாள்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும்,...

உயிரிழந்த யாழ் மாணவர்களின் குடும்பத்திற்கு நஸ்டஈடு

கொக்குவில் - குளப்பிட்டியில் வியாழக்கிழமை உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பத்திற்கு நஸ்டஈடு வழங்கப்படும் என, ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை மாலை யாழ். பொது நூலகத்தில் ஜனாதிபதி தமிழ் ஊடகப் பிரிவினர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும் மாணவர்கள் இருவர் இறந்த செய்தி கேட்டு ஐனாதிபதி மிகுந்த...

மர்ம படகில் வந்த மூவர் கைது

இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வந்த படகிலிருந்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. அவர்களிடமிருந்து, படகு மற்றும் அதிவேக படகுக்கான இன்ஜின் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் மீனவர்கள் இல்லை என்ற சந்தேகம் வந்ததையடுத்து அவர்களிடம் பொலிஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு...

நாட்டில் கடும்மழை பெய்யும் வாய்ப்பு

வங்காளவிரிகுடாவில், இலங்கையின் வடகிழக்காக, 1,400 கிலோமீற்றர் தொலைவில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக, இலங்கையின் அநேகமான இடங்களில் கடும் மழை பெய்யக் கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த தாழமுக்கம் காரணமாக, இலங்கை நேரடியாகப் பாதிக்கப்படாது. எனினும், வடக்கு, தெற்கு, மேல் மற்றும் மலையகப் பகுதிகளில் 100- 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிய பெய்யலாம் எனவும் அத்திணைக்களம்...

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் கொடூரமான கொலை: யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

2009 ஆம் ஆண்டிற்கு பின் இடம்பெற்ற மிக கொடூரமான சூட்டுச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி சரவணபன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன் தினம் யாழ் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும்...

யாழ்.பல்கலைகழக மாணவனின் உடலம் கிளிநொச்சியில் அஞ்சலிகாக வைக்கப்பட்டுள்ளது

பொலிசாரின் துப்பாக்கி சூட்டின் போது, கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் யாழ்.பல்கலைகழக 3ஆம் வருட மாணவன் நடராசா கஜனின் உடலம் தற்போது கிளிநொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன்போது மக்கள், அரசியல்வாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர் குறித்த இளைஞனின் கொலையால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

சிகரெட் ஒன்று 55 ரூபாவாகும்: சுகாதார அமைச்சர்

சிகரெட் ஒன்றின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தற்பொழுது அமைச்சரவையினால் ஒரு சிகரெட்டின் விலை 7 ரூபாவினால் உயத்தப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து எதிர்வரும் நாட்களில் ஒரு சிகரெட்டின் விலை 15 வீத வரியினால் அதிகரிக்கப்படும். தற்பொழுது சிகரெட் ஒன்று 42 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. பீடி, சுருட்டு...

துரத்தி பிடிக்க முடியாவிட்டால் 1000 சீசீ மோட்டார் சைக்கிள் எதற்கு? மனோ

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமானது யாழ் மக்கள் பொலிஸ் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு கொட்டாஞ்சேனையில் இன்று இடம்பெற்ற “அரசசேவை உங்களுக்காக” என்ற தொனிப்பொருளிலான நடமாடும் சேவையில் கலந்துக்கொண்ட...

பொலிஸாரின் அத்துமீறிய செயற்பாட்டால் இரண்டு அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டையடுத்து இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகியுள்ளமை பெரும் கவலையளிக்கும் விடயமாகும். பொலிஸாரின் அத்துமீறிய இத்தகைய செயற் பாடு குறித்து உரிய விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை...

வடக்கில் அரச பயங்கரவாதம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளதா? என். சிறிகாந்தா

>பல்கலை மாணவர் மீதான துப்பாக்கிச் சூட்டின் பின்னணி முழுமையாக ஆராயப்பட வேண்டும். இச்சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் கோருகின்றேன் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புத் தொடர்பில்...
Loading posts...

All posts loaded

No more posts