உரும்பிராய் சந்தியில் இளைஞன்மீது பொலிஸார் தாக்குதல்?

உரும்பிராய் சந்திப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில், இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன், உறவினர்களுடன் சென்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில், அலைபேசி சிம் அட்டை விற்பனை செய்யும் தன்னை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து...

யாழில் பொலிஸாருக்கு பதிலாக விசேட அதிரடிப்படையினர்

யாழ்ப்பாணத்தில் கடந்த 21ஆம் திகதி, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் பொலிஸார் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக விசேட அதிரடிப் படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். வழமையாக ஹர்த்தால் உள்ளிட்ட சம்பவங்களின் போது, பொலிஸார் பூரண பாதுகாப்பை வழங்குவார்கள். ஆனால், இன்று ஹர்த்தால் நடைபெறும் போது பொலிஸார் எவ்விதப் பாதுகாப்பையும்...
Ad Widget

சுலக்ஸனின் இறுதி ஊர்வலம்

பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இலக்காகி உயிரிழந்த, யாழ். பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்ஸனின் இறுதிச்சடங்கு, சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று திங்கட்கிழமை (24) இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அணிதிரண்டு, மாணவனுக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன், இரங்கல் உரையையடுத்து, மாணவனின் பூதவுடல், உடுவில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பொலிஸார் மீது வாள்வெட்டு : உரிமை கோரியது ‘ஆவா’ குழு

சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு 'ஆவா' குழு உரிமை கோரியுள்ளது. மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் 'ஆவா' குழுவினரால் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளிலேயே இவ்வாறு உரிமை கோரப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர் நீத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆழ்ந்த கண்ணீர்...

பொலித்தீன், பிளாஸ்ரிக், இலத்திரனியல் கழிவு ஒழிப்பு வாரம்

மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஒக்டோபர் 24ஆம் திகதி தொடங்கி 30 வரையான நாட்கள் தேசிய பொலித்தீன், பிளாஸ்ரிக், இலத்திரனியல் மின்சாதனக் கழிவு ஒழிப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இக்கழிவு ஒழிப்பு வாரத்தின் யாழ் மாவட்டத்துக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (24.10.2016) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றுள்ளது. வடக்கு சுற்றாடல் அமைச்சர்...

போக்குவரத்து பொலிஸாரின் கொட்டகைக்கு தீ வைப்பு

கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள போக்குவரத்து பொலிஸார் பயன்படுத்தும் கொண்டகைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த கொட்டகையில் நின்று பொலிஸார் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றமை வழமையான ஒன்றாகும். ஆயினும் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது பொலிஸார் எவரும் அங்கு இருந்திருக்கவில்லை எனக்குறிப்பிடப்படுகிறது. இதனால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இனம் தெரியாத நபர்கள் நெருப்பு பந்தம் ஒன்றை...

நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலை பீடங்கள் இயங்காது!

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலை பீடங்கள் இயங்காது என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள எந்தவொரு பீடங்களுமோ கல்விச் செயற்பாடுகளோ நடைபெறமாட்டாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை...

பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை, கொழும்பில் கண்டனபோராட்டம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை கண்டித்து இன்று பிற்பகல் 4 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கண்டன போராட்டம் இடம்பெறவுள்ளது. சிவில் அமைப்புக்களும் ஊடக அமைப்புக்களும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு நீதிக்காக குரல் எழுப்புமாறு ஏற்பாட்டுக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேவேளை வடக்கில் நாளைய...

மாணவர் படுகொலை ; கிளிநொச்சியில் பேரணி , கிழக்குப் பல்கலை மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவர்களது மரணத்திற்கு நீதி கோரியும் இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் பேரணி இடம்பெற்றது . கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த பேரணி கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது....

ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக பீடங்களின் மாணவர் ஒன்றியம் அறிக்கை

போருக்கு பிந்திய சூழலில் இடம்பெற்றுள்ள இக்கொலைகள் யாழ்ப் பல்கலைகழக சமூகத்தையும் அனைத்து தமிழ் சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக பல்கலைக்கழக பீடங்களின் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் முழுமையாக நடைபெற்று சம்பவத்துடன் தொடர்பானவர்கள் தண்டிக்கப்படுவது இயல்பு நிலை மீளுருவாக்கத்திற்கு மிகவும் அத்தியாவசியமானதாகும். ஆரம்பத்தில் பொலிஸார் இந்த கொலைகளை விபத்தாக காட்ட முனைந்தமை...

மாணவர்களின் போராட்டத்தை உலங்கு வானூர்தியில் அவதானித்த பொலிஸார்?

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், நீதிகோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் முற்றுகைப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதனால் இன்று காலை எட்டு மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை, யாழ் மாவட்ட செயலகம், ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றின் பணிகள் முடக்கப்பட்டிருந்ததுடன், ஏ9 வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. மிகவும்...

விஜயகுமார் சுலக்சனின் இறுதி சடங்கு இன்று

கொக்குவில் பகுதியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விஜயகுமார் சுலக்சன் என்ற மாணவனது இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது. இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று பிற்பகல் மாணவனது இல்லத்தில் இடம்பெறவுள்ள நிலையில், பூதவுடலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள், அரசியல்வாதிகள் உட்பட பெருந்திரளானோர்...

மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்தது பல்கலைக்கழக மாணவர் போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவடைந்துள்ளது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என் வேதநாயத்திடம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்குவதற்கான மகஜர் ஒன்றும் மாணவர்களால் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் மர்மங்களுக்கு யார் காரணம்! புலனாய்வு ஊடகமொன்றின் செய்திக் குறிப்பு!

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் பொலிஸ் புலானாய்வு பிரிவு உறுப்பினர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஆகியவை ராஜபக்ச தரப்பு சூழ்ச்சியாளர்களின் செயற்பாடு என யாழ்ப்பாணத்தில் பணி யாற்றிய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளார். யாழில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் சிவில் உறுப்பினர்கள் உயிரிழந்த சம்பவங்கள் 1980ஆம் ஆண்டுகளுக்கு பின்னர்...

பியர் அருந்திய மாணவிகள் இடைநீக்கம்

தென் மாகாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்றும் மாணவிகள், வகுப்பறைக்குள் பியர் அருந்திவிட்டு, மோசமான முறையில் நடந்துக்கொண்டமையால், பாடசாலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தென் மாகாண கல்வித்திணைக்களத்தின் பாடசாலை ஒழுக்காற்றுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தை பாடசாலையின் அதிபர் மறைப்பதற்கு முயற்சி செய்ததாகவும் எனினும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களால், குறித்த பிரிவுக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து,...

ஏ-9 வீதி போக்குவரத்து ஸ்தம்பிதம்; பொலிஸார் கடமையில் இல்லை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைப் பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தமையைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு இன்று திங்கட்கிழமை (24) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் ஏ-9 வீதியின் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதேவேளை, பொலிஸார் அப்பகுதியில் கடமையில் ஈடுபடவில்லை. இச்சம்பவத்தில் பொலிஸார் தொடர்புபட்டுள்ளதனால் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுன்னாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

சுன்னாகம் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர், அங்கு பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சுன்னாகம் நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் கப்பம் பெறச் சென்ற குழுவொன்று மற்றும் ஆயுதம் இன்றி சிவில் உடையில் இருந்த மூன்று பொலிஸாருக்கும்...

யாழ் மாவட்ட செயலகம், ஆளுநர் அலுவலகம் பல்கலை மாணவர்களால் முற்றுகை

மாவட்ட செயலகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளதனால் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கடமைகளுக்குச் செல்ல முடியாமல் வெளியே காத்திருக்கின்றனர். இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகமும் பல்கலைக்கழக மாணவர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் விரைகிறது காவல்துறையின் உண்மையைக் கண்டறியும் குழு!

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, உண்மையைக் கண்டறியும் குழுவொன்றை யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்போவதாக தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தக் குழு இன்று யாழ்ப்பாணம் வரவுள்ளது எனவும், மாணவர்கள் மரணம் தொடர்பாக அந்தக்குழு விசாரணை நடாத்துமெனவும், தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். மாணவர்களின் கொலை தொடர்பான...

வெடிபொருளில் சிக்கி எட்டுப்பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி கிளாலிப்பகுதியில் மாடுபார்க்கச்சென்ற எட்டுப்பிள்ளைகளின் தந்தை ஒருவர் வெடிபொருளில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி கிளாலி பகுதியில் இரண்டு பேர் காணாமல் போன மாடுகளைத் தேடி சென்றபோது வெடிபொருளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதானாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற...
Loading posts...

All posts loaded

No more posts