கேலிச்சித்திர ஓவியரான அஸ்வின் சுதர்சனின் இறுதிக் கிரியைகள் இன்று அவரது சொந்த இடமான மாதகலில் நடைபெறவுள்ளது.
கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் என அழைக்கப்படும் யாழ்ப்பாண மாவட்டம், மாதகலைச் சேர்ந்த சிரேஷ்ட காட்டூன் ஊடகவியலாளரான அஸ்வின் சுதர்சன் கடந்த 22ஆம் திகதி உக்கிரைன் நாட்டில் திடீரென ஏற்பட்ட வயிற்று வலியாலும் போதிய சிகிச்சை அளிக்கப்படாமையாலும் மரணமடைந்தார்.
இவரின் பூதவுடல் நேற்றிரவு 8.00 மணியளவில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், தற்போது அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4.00 மணியளவில் மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் பூதவுடல் புனித செபஸ்ரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
