Ad Widget

டில்ருக்ஷியின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டார் மைத்திரி!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்கவின் பதவி விலகலை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு விரைவில் புதிதாக ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அண்மையில் தான் இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரை தொடர்பாக விளக்கமும் அளித்துள்ளார்.

தான் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவைக் காப்பாற்ற முனையவில்லையெனவும் தெரிவித்த அவர், அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை செய்தபோது அங்கு 15 வரையான காவல்துறை விசாரணையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷவுடன் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மூன்று கடற்படைத் தளபதிகளினதும் கௌரவம் பாதிக்கப்படுவது குறித்தே தான் அங்கு பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts