‘சம்சுங் நோட் 7’க்கு மற்றுமொரு தடை

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், மிஹின் லங்கா நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களில் 'சம்சுங் நோட் 7' திறன்​பேசிக​ளை கொண்டுவருவது மற்றும் பாவிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த திறன்​பேசிகளுடன் தமது விமான சேவையைப் பெற்றுக்கொள்ள வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

 மருந்து பொருட்களின் விலைகுறைப்பு வெள்ளிக்கிழமை அமுலாகும்

மருந்து பொருட்களின் விலை குறைப்பு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, அத்தியாவசியமான 48 வகையான மருந்துப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நாட்டில் அதிகமாக காணப்படும் நோய்களுக்கான மருந்துகளும் இதில் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், வலிப்பு, ஆஸ்துமா,...
Ad Widget

புதிய அரசியலமைப்பு அமுல்படுத்தப்படும் வரை புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப மாட்டார்கள்

புதிய அரசியலமைப்பு அமுல்படுத்தப்படும் வரை புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப மாட்டார்கள் என எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இளம் தொழில் முயற்சியாளர்கள் சபையின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட இரா.சம்பந்தன், அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார். விவசாயம், மீன்பிடி மற்றும் வாழ்வாதார துறைகள்...

தமிழினியின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி மரணித்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாமியின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியில் இருந்து மனிக்பாம் இடைத்தாங்கல் முகாமில் தனது குடும்பத்தினருடன்...

மக்களின் பிரச்சினைகளை கொஞ்சமாவது தீர்த்து வையுங்கள் : பிரதமருக்கு ஆனந்தசங்கரி கடிதம்!!

'நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடம்பர வாகனத்துக்கு பெருந்தொகை பணம் இறக்குமதித் தீர்வாக அரசாங்கத்தால் வரிவிலக்கு செய்யப்பட்டமை தொடர்பில், உணர்வுபூர்வமாக வாக்களித்த தமிழ் மக்கள் இதையறிந்து பெரும் சினமடைந்துள்ளனர். மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் சிலவற்றையேனும் அரசாங்கம் பொறுப்பேற்று அவற்றுக்கு தீர்வுக் காணவேண்டும்' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தெரிவித்துள்ளார். பிரதருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்...

வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. வித்தியா கொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் எம்.எம்.றியாழ் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். சந்தேகநபர்கள் 12 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணை...

நாமல் ராஜ பக்சே மீது நூற்றுக்கும் மேற்பட்ட பாலியல் புகார்கள்

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந் துள்ளன. அவரது தம்பிகள், மனைவி மற்றும் மகன்கள் மீது அத்தகைய புகார்கள் கூறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராஜ பக்சே மூத்த மகன் நாமல் மீது அதிரடியாக ‘செக்ஸ்’ புகார் கூறப்பட்டுள்ளது. தற்போது நாமல் இலங்கை பாராளுமன்றத்தில் எம்.பி....

பெண்கள் அரசியலுக்கு அதிகமாக வாருங்கள் : யாழ்.மாவட்டச் செயலர்

யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதார முறையில் அரசியலிலும் பெண்களின் பங்களிப்பானது அதிகரிக்கப்படவேண்டும் என யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்.மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

யாழ். நகரில் ஆயுதம் தரித்த பொலிஸார் இரவு முழுவதும் விசேட ரோந்து

யாழ்ப்பாணம், நகர்ப் பகுதியில் கடந்த சனிக்கிழமை (15) இரவு இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆயுதங்கள் தரித்த பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (16) இரவு முழுவதும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம், முலவைச் சந்தி, இலுப்பையடிச் சந்தி, ஆரியகுளம் சந்தி உள்ளிட்ட பல இடங்களில் இரண்டு குழுக்கள் சண்டையிட்டுள்ளனர். முகத்தை கறுப்புத் துணியால் கட்டியபடி இவர்கள் சண்டையிட்டுள்ளதுடன்...

யாழில் நாளை மாபெரும் கண்டனப் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 16ஆம் ஆண்டு நினைவு தினத்தன்று மாபெரும் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். பேருந்து நிலையம் முன்பாக நாளை (19ஆம் திகதி) காலை 10.30 அளவில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த கண்டனப் போராட்டம் இடம்பெறவுள்ளது. “படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமற்போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்களுக்கு, சர்வதேச ஊடக அமைப்புக்கள்...

வட மாகாண பெண்களை இலக்குவைக்கும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வடக்கில் உழைக்கும் பெண்களை இலக்குவைத்து சுரண்டலில் ஈடுபடும் நுண்நிதி நிறுவனங்களை இழுத்து மூடுமாறு வலியுறுத்தி, வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் வாகன இலகு கொடுப்பனவு என்ற பெயரில் மக்களை சுரண்டி கொள்ளையிடும் நிதி நிறுவனங்களை மூடுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்....

வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் படுக்கையிலிருக்கும் நோயாளிகளை பராமரிக்கும் புதிய செயற்திட்டம் ஆரம்பம்

யுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் விசேட செயற்திட்டமொன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்திட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த...

மாணவர்களின் காலணிகளை நடுவீதியில் குவித்த அதிபரினால் குழப்பம்

கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை பாடசாலைக்கு வெளியே பிரதான வீதியின் நடுவில் குவித்த அதிபரின் செயற்பாட்டினால் பாடசாலையில் நேற்று திங்கள் கிழமை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து அதிபரின் செயற்பாட்டுக்கு தங்களின் கடும் எதிர்ப்பினை வெளியிட்ட போது வலயக் கல்வித் திணைக்களம் தலையிட்டமையினால் நிலைமை சுமூகமாகியது. நேற்று...

கிளிநொச்சியில் கடத்தப்பட்ட வர்த்தகர் அடிகாயங்களுடன் காவல்துறையில் தஞ்சம்!

கிளிநொச்சியில் வைத்து சில நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட வர்த்தகர் ரதீசன் உடலில் பலத்த அடிகாயங்களுடன் கடத்தப்பட்டுள்ளவர்களால் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கிளிநொச்சி காவல்துறையில் சரணடைந்துள்ளார். சாவகச்சேரி, இடைக்குறிச்சி – வரணியைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சியில் அவரது அச்சகத்துக்குச் சென்றுகொண்டிருந்தவேளையில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என...

48 அத்தியவசிய மருந்து வகைகளுக்கான வர்த்தமானி அறிவித்தல்

48 அத்தியவசிய மருந்து வகைகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள உயர்ந்தபட்ச சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது. உத்தியோகபூர்வ கட்டுப்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கு அமைய மருந்து வகைகளின் விலைகள் நிர்ணயிக்கப்படவுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்தார். ஏனைய மருந்து வகைகள் விலைகளும் படிப்படியாக குறைக்கப்டும் என்றும் அவர்...

கள்ளத்தோணியில் இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதி கைது

இலங்கையில் இருந்து கள்ளத்தோணி மூலம் இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கள்ளத்தோணி மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு வந்த அவரை, தனுஷ்கோடி கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி வந்த குற்றத்தில், ‘கியூ’ பிரிவு பொலிஸாரிடம் குறித்த இலங்கையர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் பெயர் அருள்செல்வன் என்று...

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி இராஜினாமா

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் முப்படைத் தளபதிகள் சிலரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சில கருத்துக்களை வௌியிட்டிருந்தார். ஜனாதிபதியின் குறித்த உரையே டில்ருக்‌ஷியின் இராஜினாமாவுக்கு காரணமாக இருக்கலாம் என, நம்பத்...

மின் வெட்டு நேரம் குறைப்பு (முழு விபரம் இணைப்பு)

கடந்த 15ம் திகதி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இலங்கையில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்றில் இருந்து (17) எதிர்வரும் 21ம் திகதி வரை காலை இரண்டரை மணித்தியாலங்களும் இரவு ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்தது. எனினும், குறித்த நேரத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய,...

எந்தெந்த நேரங்களில் மின் வெட்டப்படும் ; வலயங்களாக பிரிப்பு

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் எற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக இன்று முதல் மூன்றரை மணித்தியால மின்சார தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. குறித்த மின் தடை கொழும்பு நகரத்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அமுலுக்கு வருவதாக மின்சாரசபை மேலும் கூறியுள்ளது. இம்மாதம் 17 ஆம் திகதியிலிருந்து 21...

 பஸ்ஸை தாக்கி கொள்ளை

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி ஞாயிற்றுக்கிழமை (16) மாலை சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸை, யாழ். மாவட்டச் செயலகத்தை அண்மித்த பகுதியில் வழிமறித்து, சாரதி, நடத்துநர் மற்றும் பஸ் மீது தாக்குதல் நடத்தி, நடத்துநர் வைத்திருந்த பணம் மற்றும் ரிக்கெட் புத்தகம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். பயணி ஒருவரை இறக்குவதற்காக பஸ் நிறுத்தப்பட்டபோது,...
Loading posts...

All posts loaded

No more posts