யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி ஞாயிற்றுக்கிழமை (16) மாலை சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸை, யாழ். மாவட்டச் செயலகத்தை அண்மித்த பகுதியில் வழிமறித்து, சாரதி, நடத்துநர் மற்றும் பஸ் மீது தாக்குதல் நடத்தி, நடத்துநர் வைத்திருந்த பணம் மற்றும் ரிக்கெட் புத்தகம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
பயணி ஒருவரை இறக்குவதற்காக பஸ் நிறுத்தப்பட்டபோது, பின்னால் படி ரக வாகனத்தில் வந்தவர்கள், தமது வாகனத்தை பஸ்ஸின் குறுக்காக நிறுத்தி, சாரதி மீது முதலில் தாக்குதல் நடத்தினர்.
தொடர்ந்து, நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியதுடன், பஸ்ஸின் கண்ணாடிகளையும் உடைத்தனர். இதன்பின்னர், தகாத வார்த்தைகளால் ஏசியபடி அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
இது தொடர்பில் பஸ் சாரதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.