- Saturday
- August 15th, 2026
ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளார்கள். இந்நிலையில் அரசாங்கத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் பதவியை தற்போது பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் வகித்து வருகின்றார். ஜனாதிபதி இந்தியாவின் கோவாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக பெல்ஜியத்திற்கு...
யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது அண்மைக்காலமாக மீளவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் இரவு யாழ்.குடாநாட்டி நகரப்பகுதிகளில் மூகமுடி அணித்த கும்பலொன்று வாள்வெட்டுத்தாக்குதலில் ஈடுபட்டிருந்ததையடுத்து யாழ்.நகரில் பதற்றமான சுழல் ஏற்பட்டது. இந்நிலையில் இவ் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில்...
கிளிநொச்சி – முழங்காவில் - பல்லவராயன் - கட்டுசோலை பகுதியிலுள்ள வீட்டுக்குள் இன்று அதிகாலை சென்ற கொள்ளைக் கும்பல் ஒன்று, கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த கணவன், மனைவி ஆகியோரை அச்சுறுத்தி பணம் மற்றும் நகை என்பவற்றை கொள்ளைக்குழு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் முப்பத்தாறு பவுண்...
கோத்தபாயவை காப்பாற்றும் வகையில் எனது உரை அமைந்திருக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பொன்றின் போது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் உட்பட ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களும் அங்கிருந்துள்ளனர். இதன்போது சமகால நெருக்கடியாக மாறியுள்ள ஜனாதிபதியின் உரை தொடர்பில் அவர்...
வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டு தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக தெளிவுபடுத்த முற்பட்டபோதே கடுமையான வாக்குவாதம் மக்களுக்கும் சுமந்திரனுக்குமிடையில் இடம்பெற்றது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு “முடியும் என்றால் பதிலளிப்போம் அதில் நாம் என்ன சொல்லப்போகின்றோம் என நீங்கள் சொல்லமுடியாது என்றும் சொல்லக்கூடிய கேள்விக்கு பதில்சொல்வோம் என்று சுமந்திரன்...
கடந்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு மிக கூடுதலான நிதியினை ஒதுக்குகின்றார்கள் அதனை போன்றுதான் இம்முறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியம் கொடுக்காது எதிர்வரும் ஆண்டுகளில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் கூடுதலான நிதியினை ஒதுக்கவேண்டும் என்று பணிவான வேண்டுகோளை விடுக்கின்றேன் என, சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ் தெல்லிப்பளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே...
நாடளாவிய ரீதியில் இன்று முதல் சில மணி நேர மின் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை இரண்டரை மணித்தியாலங்களும், காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை ஒரு மணித்தியாலமும் மின் வெட்டு அமுல் படுத்தப்படவுளள்தாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நீரில் உள்ள பிரச்சினைகள் மற்றும் குடிநீர் சம்பந்தமான குறைபாடுகள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் தேசிய நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் விசேட பணிப்புரையின் கீழ் அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நீர் வழங்கல் அமைச்சின் பிரதி தவிசாளருமான சபீக் ரஜாப்தீன்...
அளவெட்டி வடக்கு கிராமியச் செயலகத்தின் முதலாமாண்டு நிறைவு நிகழ்வுகள் அண்மையில் கிராமசேவையாளர் க.கணேசதாஸ் தலமையில் நடைபெற்றன. இந் நிகழ்வில் அரச அதிபர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந் நிகழ்வுக்கு வலி வடக்குப் பிரதேச செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ஆன உதவிப்பிரதேச செயலர் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த...
தீர்வை வரி இன்றி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிக்கமைய, இதுவரை 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவைபற்றி மாகாணசபை உறுப்பினர்கள் பேசத் தேவையில்லை. இவர்கள் அபிவிருத்தியில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதுமானது என்று சிலரால் தொடர்;ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர்...
யாழ்ப்பாணத்தின் தனியார் கல்வி நிலைய பிரபல வர்த்தக ஆசிரியர் ஜெனதாஸ் பசில் காலமானார். இவர் கடந்தவாரம் வாகனவிபத்து ஒன்றில் சிக்கி யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையின் 15 ஆம் திகதி இரவு மரணமடைந்தார். இவரது மனைவியும் இவ் விபத்தில் காயமடைந்து கோமா நிலையில் உள்ளார்.பல்லாயிரக்கணக்கான மாணவர்களை கற்பித்து மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். ஈழத்தில் அரசபதவிகளில் உயர்...
அப்துல் கலாம் யாழ். மண்ணிற்கு விஜயம் செய்தமை இங்குள்ளவர்களைப் போன்று நாங்களும் மிகப் பெருமையாகக் கருதுகிறோம் என யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார். இந்தியக் குடியரசின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.கே அப்துல் கலாமின் 85 ஆவது பிறந்த தின நிகழ்வு நேற்று(15) சனிக்கிழமை முற்பகல் யாழ். பொது...
இளவாளை பகுதியில் சுமார் 35 பொதிகளில் பொதியிடப்பட்ட கஞ்சா பொதிகள் இன்று காலை யாழ்.புலனாய்வுதுறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சாக்களின் மொத்த பெறுமதியும் நிறையும் கணக்கிடப்படவில்லை என புலனாய்வுத்துறை பொலிஸார் தெரிவித்ததுடன் அதற்கான நடவடிக்கைகள் தற்போது மெற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு மருதனார்மடம் பேருந்து தரிப்பிடத்தில் தேசியத் தலைவரின் படத்தினை ஒட்டினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பெண் ஒரு மனநோயாளியென தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உண்மையில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் இல்லையெனவும் தெரியவந்துள்ளது. குறித்த பெண் தொடர்பாக ஜேர்மனியில் வசிக்கும் பெண்ணிய செயற்பாட்டாளர் ஒருவர் தனது முகப்புப் புத்தகத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,...
கிளிநொச்சி நகரில் நேற்று முன்தினம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ள இளம் வர்த்தகர் ரதீஸின் மனைவி சர்மிளா ரதீஸ் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டம், இடைக்குறிச்சி, வரணியைச் சொந்த இடமாகக் கொண்ட வர்த்தகரான ரதீஸ்(35) நேற்று முன்தினம் நண்பகல் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் தனது வீட்டிலிருந்து அச்சகத்துக்குச் சென்றுகொண்டிருக்கும்போதே இடையில்...
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளங் காணப்பட்ட பொலிஸாரில், கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பண்டார மற்றும் இரண்டு பொலிஸார் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நீதிமன்றத்தினால் கடந்த 10ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின்...
யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தால் இராணுவ அதிகாரிகள் சிலர், விளக்கமறியலில் வைக்கப்பட்டமை மற்றுமொரு இனவாத செயல் என தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இனவாத கருத்துகள் ஊடாக அரசியல் நடத்துவது மீண்டும் மீண்டும் உறுதிசெய்யப்படுவதாக வண. போகமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார். அதன்காரணமாக தமிழ் நீதிபதிகளை நம்பவில்லை என்றும்...
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணியை ஏல விற்பனை செய்யுமாறு பூகொடை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
வடக்கில் விகாரைகளை கட்டுவதற்கு, தீவிரவாதிகளே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என, நாகவிகாரை விகாரதிபதி விமலசிறி தேரர் தெரிவித்தார். யாழ். மாவட்ட சர்வமத பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு, யாழ். மறைக்கல்வி நிலையத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், “வடக்கில் விகாரைகள்...
Loading posts...
All posts loaded
No more posts
