நாடு முழுவதிலும் பொலிஸ் பிரிவுகளை தயார் நிலையில் இருக்குமாறு அவசர உத்தரவு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் பிரிவுகளையும் இன்று மாலை 6 மணி முதல் தயார் நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக சிங்கள இணைய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் விடுமுறையில் சென்ற பொலிஸ் அதிகாரிகள்...

வாள்வெட்டு குற்றவாளிகளின் தண்டனை தீர்ப்பை இரத்துச் செய்ய யாழ் மேல் நீதிமன்றம் மறுப்பு

மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார். வீட்டுக்குள் அத்துமறிச் சென்றமை, சட்டவிரோதமாகக் கூட்டம் கூடி, சிறிய காயம் மற்றும் கடும் காயம் விளைவித்தமை 6 லட்சத்து 61 ஆயிரம் ரூபா பெறுமதியான...
Ad Widget

இராணுவத்தின் மீதான கரிசணை ஏன் தமிழ் அரசியல் கைதிகள் மீதில்லை: சுமந்திரன்

பதினாறு மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பில் அக்கறை கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏன் 16 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சிந்திப்பதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சாடியுள்ளார். ஊடகமொன்று சுமந்திரன் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...

சுவரொட்டியை ஒட்டிய பெண்ணை ஜேர்மனுக்கு நாடுகடத்தத் திட்டம்!

மருதனார் மட பேருந்துத் தரிப்பிடத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்தை ஒட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண்ணை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜேர்மன் நாட்டு பிரஜாவுரிமையைக் கொண்ட மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண் நேற்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே அவர்...

பாடசாலை மாணவி உயிரிழப்பு, நெடுந்தீவு மக்கள் ஆர்ப்பாட்டம்!

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்விகற்றுவந்த மாணவி ஒருவர் நெஞ்சுவலியென பாடசாலையிலிருந்து வைத்தியசாலைக்குக் கொண்டுசென்று அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, நேற்று நெடுந்தீவு மக்கள் பிரதேச வைத்தியசாலையின் தரம்போதாமை மற்றும் வைத்தியர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும், வைத்தியச் சிகிச்சை போதியளவில் அளிக்கப்படாமையினாலேயே குறித்த மாணவி நேற்று முன்தினம் (புதன்கிழமை) மரணமானார்...

சுடுநீர் பாத்திரத்திற்குள் விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி மரணம்!

குருநகர் பிரதேசத்தில் சுடுநீர்ப் பானைக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை குருநகர் தண்ணீர்த் தாங்கி வீதியில் உள்ள வீடொன்றில், கணவரும் அவரது வேலையாட்களும் கடற்றொழிலுக்குப் புறப்படுவதற்காக மனைவி அதிகாலை முற்றத்தில் பெரிய பாத்திரத்தில் நீரைக் கொதிக்கவைத்துள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக குறித்த...

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இருபாலைச் சந்தியில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர், நேற்று வியாழக்கிழமை (13) உயிரிழந்தார். கோப்பாய் தெற்கைச் சேர்ந்த நல்லலிங்கம் சுஜிந்தம் (வயது 30) என்பவரே உயிரிழந்தார். வீதியைக் கடப்பதற்காகத் தயாராக நின்ற இவரை, வேகமாக வந்த கார் மோதியதில் படுகாயமடைந்த இந்நபர், அதே...

யாழ் மாவட்டத்தில் சிறுவர்கள் மீதான வன்முறைச் சம்பங்கள் அதிகரிப்பு

சிறுவர்,சிறுமிகள் தொடர்பாக பெற்றோர்களுக்கு அக்கரை இன்மையின் காரணமாக யாழ் மாவட்டத்தின் சிறுவர்களுக்கான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு முகம் கொடுக்கும் தூர்ப்பாக்கிய நிலை எற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். கடந்த ஆண்டினை விட தற்போது 08 சதவீதத்தினால் வன்முறைச்சம்பங்கள் யாழ் மாவட்டத்தில் அதிகாரித்துள்ளதாக யாழ் மாவட்ட...

உலகத்திலுள்ள மிக பழமையான கார்களிலொன்று யாழ்ப்பாணத்தில்!!

உலகத்திலுள்ள மிக பழமையானதும் பிரபல்யமானதுமான கார்களில் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வனிடமுள்ளது. இக் கார் 1929 ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அக் காலப்பகுதியில் இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்திருந்த நிலையில் இங்கே பல பண்ணையர்களும் இருந்திருந்தனர். அவ்வாறு ஓர் பண்ணையாளரான பொன்னையா இராஜேந்திரன் தனது பண்ணைகளை சுற்றிப்பார்க்கவும்...

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு: மத்திய சுகாதாரப் பணிப்பாளருக்கு பகிரங்கப் பிடியாணை!

சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் கழிவு ஓயில் மாசாகக் கலந்தமை தொடர்பாக நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதாரப் பணிப்பாளருக்கு பகிரங்கப் பிடியானையை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதுடன் கொழும்பு சிரேஸ்டப் பொலிஸ் அத்தியட்சகரையும் மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளையும் பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு விசாரனையானது நேற்றைய தினம் மல்லாகம் நீதவான்...

முதல்வரின் உத்தரவு: புதிய அதிபர் நியமனங்களை ரத்து செய்தார் கல்வி அமைச்சின் செயலாளர்!

வடமாகாணத்தில் புதிய அதிபர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட நியமனங்களை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் வடமாகாணத்தில் இருந்து அதிபர் தரம் – III போட்டி பரீட்சையில் 398 பேர் சித்தி பெற்றிருந்தனர். அவர்களில் 84 பேருக்கு நேர்முகப்பரீட்சை மூலம் அதிபர் வெற்றிடம்...

2ஆம் லெப் மாலதியை நினைவுகூரவே சுவரொட்டியை ஒட்டினேன்!

யாழ்ப்பாண மாவட்டம் மருதனார் மடப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிதும், தமிழீழ தேசியப்பறவை, தேசிய மரம், போன்ற முக்கிய நிகழ்வுகள் அடங்கிய சுவரொட்டிகளையும் ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் கைதாகிய பெண் தான் களத்தில் முதல் பலியான பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியை நினைவுகூரவே இதனை ஒட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறித்த பெண்...

வடமாகாண மீன்பிடித்துறைக்கு ‘எட்கா’வால் ஆபத்து?

இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான பொருளாதார மற்றும் ஒத்துழைப்புக்கான (எட்கா) ஒப்பந்தம், இவ்வருட இறுதியில் கைச்சாத்திடப்படுமாயின், இந்திய மீனவர்களுக்கு, வருடத்தில் 85 நாட்கள், இலங்கையின் வடக்குக் கடற்பரப்பில், எவ்வித அனுமதியின்றியும் மீன்பிடிப்பதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்றுத் தெரிவித்த வடமாகாண கடற்றொழிலாளர்கள், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு, கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த...

ஆலய கிணற்றுக்குள் இறங்கியவர் மரணம்

வறுத்தலைவிளான் - அன்னம்மார் ஆலயத்திலுள்ள 60 அடி கிணற்றுக்குள் இறங்கியவர், புதன்கிழமை (12) கடற்படையினரால் சடலமாக மீட்டுள்ளார். இணுவில் பகுதியைச் சேர்ந்த இராசன் உதயபாலு (வயது 44) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது தாயாருடன் அன்னம்மார் ஆலயத் திருவிழாவுக்குச் சென்ற குறித்த நபர், அங்கு சாமி வந்து கலை ஆடியுள்ளார்....

கிராம அலுவலரைக் கடத்தியவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமஅலுவலர் பிரிவில் கடமையாற்றும் பெண் கிராமஅலுவலரை கடத்திய மூவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 13 மாதச் சிறைத்தண்டனை விதித்து, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தீர்ப்பளித்தார். மேலும், கிராமஅலுவலரின் சகோதரனை தாக்கி, அவருடைய 3 பற்களை உடைத்தமைக்காக ஒரு பல்லுக்கு 1 இலட்சம் ரூபாய் வீதம் 3...

ஒருவர் பட்டதாரியாகி 6 மாதத்துக்குள் அரச துறையில் தொழில்- பிரதமர்

பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் ஒரு பட்டதாரி, பட்டம் பெற்று 6 மாத காலத்துக்குள் அரசாங்கத்தின் ஏதாவது ஒரு துறையில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள வழி செய்ய வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (12) அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்படி, அரச துறைகளில் நிலவும்...

வட மாகாண சபையின் அடுத்த உப தலைவர் யார்?

வட மாகாண சபையின் உப தலைவரை நியமிக்கும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே வருவதாக, சபையின் உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வட மாகாண சபையின் உப தலைவராக இருந்த அன்டனி ஜெகநாதன் அண்மையில் காலமானதை அடுத்து இதுவரை அந்தப் பதவிக்கு பிறிதொருவர் நியமிக்கப்படவில்லை என, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித்...

விளம்பர படத்தில் காணாமல் போன மகள் : நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றிவிட்டது : தாய் கதறல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார விளம்பரம் ஒன்றில் காணாமல் போன எனது மகள் உள்ளிட்ட இன்னும் நான்கு பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் காணாமல் போயுள்ளனர். அவர்களது பெற்றோர்களும் பல இடங்களில் பிள்ளைகளை தேடி திறிகின்றனர். ஜனாதிபதியை சந்தித்து நான் எனது மகள் தொடர்பான தகவல்களை கூறிய சந்தர்ப்பத்தில் ஒரு மாதத்திற்குள் தீர்வை பெற்று தருவதாக...

வட மாகாண அமைச்சர்களை சந்தித்தார் ஐ.நா விஷேட அறிக்கையாளர் நாடியா

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிராதன பிரச்சினைகளான காணி கையகப்படுத்தல் மீள்குடியேற்றம், காணாமல்போனவர் விவகாரம், மற்றும் அரசியல் கைதிகள் விடயம் ஆகியவற்றிற்கு தீர்வு கிடைக்காத நிலையில் நல்லிணக்கம் என்பது சாத்தியப்படாது என வடமாகாண அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையின உரிமைகள் தொடர்பான விஷேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா நேற்று...

சட்டத்தரணியின்றி வழக்கில் வாதாடி விடுதலையான தமிழ் ஆசிரியர்!

காவல்துறையினரால் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றில் தமிழாசிரியர் ஒருவர் சட்டத்தரணியை அமர்த்தாது தானே மன்றில் முன்னிலையாகி வாதாடி விடுதலையாகியுள்ளார். இந்தச் சம்பவம் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் போக்குவரத்துச் சட்டமீறல் தொடர்பான வழக்கொன்றில் தாமாகவே வழக்கில் முன்னிலையாகி விடுதலையாகியுள்ளார். மோட்டார் போக்குவரத்து ஆணையாளரின் அனுமதியின்றி சிறிய ரக டிப்பர் ரக லொறி ஒன்றின் பின் பக்கத்தை மறைத்து...
Loading posts...

All posts loaded

No more posts