குருநகர் பிரதேசத்தில் சுடுநீர்ப் பானைக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த திங்கட்கிழமை குருநகர் தண்ணீர்த் தாங்கி வீதியில் உள்ள வீடொன்றில், கணவரும் அவரது வேலையாட்களும் கடற்றொழிலுக்குப் புறப்படுவதற்காக மனைவி அதிகாலை முற்றத்தில் பெரிய பாத்திரத்தில் நீரைக் கொதிக்கவைத்துள்ளார்.
இதன்போது எதிர்பாராத விதமாக குறித்த ஒன்றரை வயதுக்குழந்தை தவறி சுடுநீர்ப்பாத்திரத்துக்குள்ளேயே விழுந்துள்ளது.
உடனடியாக குழந்தை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும் நேற்று அதிகாலை குழந்தை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது.