Ad Widget

2ஆம் லெப் மாலதியை நினைவுகூரவே சுவரொட்டியை ஒட்டினேன்!

யாழ்ப்பாண மாவட்டம் மருதனார் மடப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிதும், தமிழீழ தேசியப்பறவை, தேசிய மரம், போன்ற முக்கிய நிகழ்வுகள் அடங்கிய சுவரொட்டிகளையும் ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் கைதாகிய பெண் தான் களத்தில் முதல் பலியான பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியை நினைவுகூரவே இதனை ஒட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் ஜேர்மனியிலிருந்து அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார் என்பதுடன், மருதனார் மடத்தில் அமைந்துள்ள நுண்கலைக்கல்லூரிக்கு அருகில் இருக்கும் விடுதியொன்றில் தங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தான் முதல் பெண் மாவீரரரை நினைவுகூரவே இதனைச் செய்ததாகவும், தான் கைதானமை தொடர்பில் எந்தவித கவலையும் அடையவில்லை என அப்பெண்ணை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Posts