Ad Widget

யாழ் மாவட்டத்தில் சிறுவர்கள் மீதான வன்முறைச் சம்பங்கள் அதிகரிப்பு

சிறுவர்,சிறுமிகள் தொடர்பாக பெற்றோர்களுக்கு அக்கரை இன்மையின் காரணமாக யாழ் மாவட்டத்தின் சிறுவர்களுக்கான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு முகம் கொடுக்கும் தூர்ப்பாக்கிய நிலை எற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டினை விட தற்போது 08 சதவீதத்தினால் வன்முறைச்சம்பங்கள் யாழ் மாவட்டத்தில் அதிகாரித்துள்ளதாக யாழ் மாவட்ட சிறுவர் நன்னத்தைப் பாராமரிப்பு பிரிவின் புள்ளிவிபரத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 48 சிறுவர் சிறுமிகள் இவ்வாறு துன்புறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர். தற்போது அது 60 சிறுவர் சிறுமிகளாக காணப்படுகின்றது என்று மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட சிறுவர் நன்னடத்தை பராமரிப்பின் ஏற்பாட்டில், சிறுவர்களின் நலன்களின் எதிர்கால செயற்றிட்டம் என்னும் கருப்பொருளிலான சிறுவர்கள் மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

யாழ் மாவட்டத்தில் சிறுவர்கள், தொடர்பான வன்முறை சம்பவங்களை தடுக்கும் விசேட செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

Related Posts