2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.

அதன்படி, பல்கலைக்கழக சேர்க்கை கையேட்டை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் அதன் டிஜிட்டல் பதிப்பை ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் ஒன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 28 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மேலும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 176,527 மாணவர்கள் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றனர்.