அனுராதபுரத்தில் இரகசிய வதைமுகாம்

கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட பலர் அனுராதபுர பிரதேசத்தில் இரகசியமாக இயங்கும் வதைமுகாமொன்றில் இருப்பதாக கையளிக்கப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டோரைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த இரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு மோசமான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக குறித்த சங்கத்தின் வடக்குக் கிழக்கு மாகாணத்துக்கான தலைவர் நாகேந்திரன் ஆஷா கொழும்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். காணாமல்போனோரின் உறவினர்கள் மற்றும் காணாமல்...

கிளிநொச்சியில் வர்த்தகர் கடத்தல்!

யாழ்ப்பாண மாவட்டம் வரணியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சியில் நேற்று மதியம்(புதன்கிழமை) கடத்தப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் தனது வீட்டில் இருந்து கிளிநொச்சியில் உள்ள தனது பதிப்பகத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிக் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதற்கிணங்க காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கடத்தப்பட்ட வர்த்தகர்...
Ad Widget

கஞ்சா வைத்திருந்தவர் விளக்கமறியலில்

வட்டுக்கோட்டை மேற்குப் பகுதியில் 1,000 மில்லிகிராம் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன், நேற்றுப் புதன்கிழமை (12) உத்தரவிட்டார். மேற்படி சந்தேகநபர், கடந்த 10ஆம் திகதி வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இதேவேளை, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை பகுதியில் 850 கிராம் கஞ்சாவுடன் 41...

திருமதி.குணசேகரன் பொன்னரசியின் சேவையை பாராட்டி பிரதீபா விருது

யாழ்ப்பாணம் வதிரியைச் சேர்ந்த திருமதி.குணசேகரன் பொன்னரசியின் சேவையை பாராட்டி இவ்வருடத்திற்கான பிரதீபா விருது வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் இவ்வாண்டுக்கான பிரதீபா விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு நெலும்பொக்கன கலையரங்கில் இராஜாங்க கல்வி அமைச்சர் ராதாகிருஸ்ணன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது திருமதி.குணசேகரன் பொன்னரசிக்கு ராஜாங்க அமைச்சரினால் இந்த விருது வழங்கப்பட்டது....

வடக்கில் புதிதாக நான்கு பூங்காக்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை

வடக்கில் புதிதாக நான்கு பூங்காக்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எஸ்.கே.பத்திரண தெரிவித்துள்ளார். இதற்காக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் காணிகளை தெரிவுசெய்வதற்கான வர்த்தகமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக வனவிலங்கு பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். இன்று நாட்டில் 22 தேசிய பூங்காங்கள் இருக்கின்றன. புதிய இந்த நான்கு பூங்காக்களுடன் மொத்தமாக 26 பூங்காக்களை...

கிளிநொச்சி மாவட்டத்தில் களஞ்சியசாலைக்கான கட்டிடதொகுதி

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய அறுவடைகளை களஞ்சியப்படுத்துவதற்காக உயர் தரத்திலான களஞ்சியசாலை ஒன்றை அமைக்கும் நோக்கில் ஆய்வு நிலையத்துடனான அலுவலகக்கட்டிக தொகுதி ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த கட்டடதொகுதியில் தங்குமிட வசதி நீர்த் தாங்கி ரானஸ்போமர் கூடம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளன . 33சதுர சுற்றளவைக் கொண்ட களஞ்சியசாலைக் கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்காக ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட...

மேலும் சில தமிழர்கள் தாயகம் திரும்பவுள்ளனர்!

தமிழக அகதி முகாம்களிலிருந்து மேலும் சில இலங்கை தமிழர்கள் அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளனர். இதில் 17 பெண்களும், 13 ஆண்களுமாக மொத்தம் 11 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் உள்ளனர். இவர்கள் எதிர்வரும் 18ம் திகதி மதுரையிலிருந்து ஶ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளனர். தற்போது நாடு திரும்ப...

வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்கள் மற்றும் சிகிச்சைக் கருவிகள் பற்றாக்குறை

அரச வைத்தியசாலைகளிள் நோயாளர்களுக்கு சிகிச்சையளிகப்பதற்கான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவக் கருவிகளுக்கான வசதிகள் போதிய அளவு இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தாதியர் சங்கம் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளது. குறித்த பற்றாக்குறை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை பற்றாக்குறையான மருந்துப் பொருள் மற்றும் சிகிச்சைக் கருவிகளை தேவையான...

பொது மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதை எதிர்க்கின்றாராம் சுவாமிநாதன்

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பொது மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துக்கொண்டு அந்தக் காணிகளில் விவசாயம் செய்வதுடன், வியாபாரத்திலும் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் தான் கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் சுவாமிநாதன், தனது இந்தக் கோரிக்கைய நிறைவேற்ற ஜனாதிபதி...

மானிடம் இயற்கை சுவையகம் திறப்பு

கடந்த விஜயதசமி நன்னாளில் மானிடம் அறக்கட்டளையும் தெல்லிப்பளை தாய்மார் கழக இணையமும் இணைந்து தெல்லிப்பளை வைத்தியசாலை முன்பாக மானிடம் இயற்கை சுவையகத்தை ஆரம்பித்துள்ளன இதனை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமாரன் ஐயா திறந்து வைத்தார். முற்றிலும் தாய்மார்களால் நடாத்தப்பட இருக்கின்ற இவ் உணவகம் இயற்கையான பழப் பானம் மோர் இலைக்கஞ்சி கூழ் குரக்கன்...

பிரபாகரனின் சுவரொட்டியை ஒட்டிய ஜேர்மனி பிரஜை கைது

மருதனார்மடம் பஸ் தரிப்பிடக் கட்டடத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டிய குற்றச்சாட்டில், ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்து, விடுதியொன்றில் தங்கியிருந்த பெண்ணொருவரை, செவ்வாய்க்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கமெரா பதிவின் அடிப்படையில் இந்தப் பெண்...

ஒக்ஸ்போர்ட் அகராதியில் ‘ஐயோ’

இலங்கை மற்றும் தென் இந்தியாவில் பயன்படுத்தும் ஒரு சொல்லான ‘ஐயோ’ (Aiyo) எனும் சொல் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அகராதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் புதிய தொகுப்பில் இந்த சொல் உள்ளடக்கப்பட்டுள்ளது. தென் இந்திய மற்றும் இலங்கையில் துன்பம் மற்றும் வருத்தத்தை தெரிவிப்பதற்கு இந்த சொல் பயன்படுத்தப்படுவதாக அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் மீதான யுத்தம் தொடர்கிறது

இலங்கையில் தமிழர்களின் சுய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையிலும், தமிழர்கள் மீதான யுத்தம் நிறுத்தப்படவில்லை என்றும், அந்த யுத்தம் வேறு வடிவத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் தமிழ் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஐ.நாவின் சிறுபான்மையினர் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியாவிடம் எடுத்துக் கூறியுள்ளனர். தமிழர்கள் மீதான யுத்தம் வேறு விதமாக தொடர்வதால் எல்லோரும் எதிர்ப்பார்க்கும்...

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான புதிய சட்ட வரைபிற்கு அமைச்சரவை அனுமதி

இலங்கையில் அமுலில் உள்ள சட்டங்களில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்ற பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்திற்குப் பதிலாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த வரைபிற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிவலாக கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத...

யுத்தத்தில் முகத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவச சத்திர சிகிச்சை! 5ஆம் திகதிக்கு முன்பு விண்ணப்பிக்கவும்

யுத்தத்தில் முகத்தில் காயமடைந்து சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் மக்களுக்கு இலவசமாக பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவினர் அறிவித்துள்ளனர். குறித்த சத்திரசிகிச்சையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி.2...

நண்பேண்டா நிகழ்வு நுழைவுச்சீட்டு வருமானம் மாத்திரம் 1 கோடியையும் தாண்டியுள்ளது!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற நண்பேண்டா இசைநிகழ்சிக்காக ஒரு கோடி ரூபாவுக்கு நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகியுள்ளதாக யாழ்ப்பாண நகரசபை தெரிவித்துள்ளது. இந்நிகழ்வு, யாழ்.நகர சபை மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரபல இந்திய பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் திரைப்பட இயக்குனரும் இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான கங்கை அமரன் உள்ளிட்ட இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின்...

வாகன விபத்தில் வவுனியாவின் பிரபல பெண் மருத்துவர் உட்பட இருவர் மரணம்

அம்பன்பொல வாகன விபத்தில் வவுனியா மருத்துவர் திருமதி கௌரிதேவி நந்தகுமாரும் அவரது பெறாமகளும் மரணமடைந்துள்ளனர். மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய சகோதரியின் மகள் ஒருவரும் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி இவர்கள் பயணம் செய்த...

12 கிலோகிராம் கஞ்சாவுடன் முன்னாள் போராளி கைது

மணற்காட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) 12.1 கிலோகிராம் கஞ்சாவுடன் 32வயதுடைய சந்தேகநபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் மேற்படிநபர், கஞ்சாவை கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கில் மணற்காட்டுப் பகுதியில் நின்றிருந்தபோது, கைது செய்யப்பட்டார். அவரிடம் மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் ​போது தான்...

யாழ்ப்பாணத்தில் கலாநிதி அப்துல்கலாமின் 85 ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வு

இந்திய குடியரசின் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமாகிய பாரத ரத்னா கலாநிதி ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 85 ஆவது பிறந்த தின நினைவு நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன. யாழ் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்வுகள் யாழ் பொது நூலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (15) இடம்பெறவுள்ளன. பாடசாலை மாணவர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களின் கலை...

இனிப்புப் பதார்த்தங்களுக்கான வர்ண அடையாளங்கள்

இனிப்புப் பதார்த்தங்களுக்கான வர்ண அடையாளத்தை அறிமுகம் செய்ய சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத் துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன திட்டமிட்டுள்ளார். இலங்கை இனிப்புப் பதார்த்த உற்பத்தியாளர் சங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பின் போது இதுபற்றி கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார். தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது பற்றியும் இதன் போது ஆராயப்பட்டது. கேக், தொதல், பூந்தி,...
Loading posts...

All posts loaded

No more posts