- Saturday
- August 15th, 2026
இலங்கை பொலிஸின் 150 ஆவது ஆண்டு நிறைவுக்கான வட மாகாண வைபவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோட்டை வளாகத்தில் நடைபெறவுள்ளது. 400 பொலிஸ் மற்றும் விசேட செயலணி படையினர் மற்றும் 300 பாடசாலை கெடட் மாணவ பயிலுநரின் அணிவகுப்பும் அங்கு இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு பொலிஸ் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் இதனை பார்வையிட முடியும்....
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனும் கிரிக்கெட் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவுக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, சுவரொன்றின் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியதாக கூறி, கடந்த செப்டம்பர் 22ம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் விபத்தினை...
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தாம் பூரண ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.. 1000 ரூபாய் நாள் சம்பளம் வேண்டியும், 6 நாள் வேலைக் கிழமையை உறுதிப்படுத்த வேண்டியும், 18 மாதங்களாக நிலுவையிலிருக்கும் சம்பளத்தொகையை வேண்டியும் கடந்த 14 நாட்களாக மலையகமெங்கும் போராடிவரும் மலையக மக்களுக்கும்...
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாகவும் அதை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை இடம்பெற்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் சமூக அமைப்புக்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்....
வடமாகாணத்திலிருந்து 26 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அமைக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை மூடுமாறு வடமாகாண சபை நிர்வாகம் அழுத்தங்களை பிரயோகிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீன் குற்றம்சாட்டியுள்ளார். எனினும் வடமாகாண முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேறுவதில்...
ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் முல்லைத்தீவு - செம்மலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் வசம் இருந்து ஒரு கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்ட பெண் முல்லைத்தீவைச் சேர்ந்த...
சங்கத்தானைப் பகுதியிலுள்ள கைத்தொலைபேசி விற்பனை நிலையத்தின் கூரையைப் பிரித்து உள்நுழைந்து திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் இருவரையும், எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் அச்சுவேலி நன்னடத்தைப் பாடசாலையில் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், நேற்றுத் திங்கட்கிழமை (10) உத்தரவிட்டார். கடந்த 9ஆம் திகதி இரவு, குறித்த கடையின் கூரைப் பிரித்து இரண்டு...
யாழ்ப்பாண முஸ்லீம்கள் மீள் குடியேறிய பரச்சேரி கிராமத்தில் இனி எதுவித கட்டுமானங்களையும் மேற்கொள்ள கூடாது எனவும் இதனால் நீர்வளம் பாதிக்கப்படுவதாக அங்கு சென்ற அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நேற்றய தினம்(10) யாழ் முஸ்லீம்கள் பரவலாக குடியேறி வரும் அப்பகுதிக்கு அரச அதிபர்,யாழ் பிரதேச செயலாளர் தயானந்தன்,விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் சகிதம் சென்று மேற்கண்டவாறு கூறி...
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றய தினம் சந்தேக...
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்குத் தேவையானதைச் செய்து வருகின்றது. இதன்போது பல்வேறு தடைகள் அரசியல் ரீதியாக ஏற்படுகின்றது. இருப்பினும், அரசாங்கம் ஒருபோதும் தமிழ் மக்களைக் கைவிடாது என மீள்குடியேற்ற, புனர்வாழ்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சா டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யுத்தகாலத்தில் வங்கி ஆவணங்களைத் தொலைத்த 54பேருக்கு புதிய வங்கி ஆவணங்களை வழங்கி...
ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருப்பதுபோல் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது எனக் கூறுவதில் எந்தவித உண்மையுமில்லையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு சில...
ரெலோ அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கவிஞர் பொன்காந்தன் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். அயல் வீட்டாருடன் நீண்டகாலமாக காணிப் பிணக்கு எற்பட்டுவந்துள்ளதோடு நேற்றய தினம் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த கைகலப்பின்போது உடைக்கப்பட்ட கண்ணாடி போத்தலினால் கவிஞர்...
இடைக்கால பருவப்பெயர்ச்சி மழையை எதிர்வரும் வார இறுதியில் எதிர்ப்பார்க்க முடியும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் வார இறுதியில் இடைக்கால பருவப்பெயர்ச்சி மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி அனுஷா வர்ணசூரிய தெரிவிக்கின்றார். இம்முறை சற்று குறைவான மழைவீழ்ச்சியே காணப்படும் . எதிர்வரும் வியாழக்கிழமை வடக்கு, கிழக்கு...
இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 16 இராணுவ வீரர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1998ம் ஆண்டு அச்சுவேலிப் பகுதி இராணுவ முகாமில் கடமையாற்றிய குறித்த இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் காணாமல் போய்விட்டதாக ஆதாரங்களுடன் நீதிமன்றில் வழக்கு...
மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பேரூந்து நிலையத்திற்குள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தேசிய அடையாளம் என பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஓட்டப்பட்டதால் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரத்தில், பிரபாகரனின் உருவப்படமும் தேசிய அடையாளங்கள் என புலி மற்றும் வாகை மரத்தின் படங்கள் அடங்கியுள்ளதோடு, விடுதலைப்புலிகளின் எழுச்சி நாட்கள்...
யாழில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘எழுந்து நிற்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் ஒன்றிணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும் ஜோன் பொஸ்கோ கல்லூரி, யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகள் மற்றும் யாழ்.மாநகரசபை...
ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட ஒரே இலக்கங்களைக் கொண்ட இரு அடையாள அட்டைகளினால் இரண்டு யுவதிகளுக்கிடையில் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி வழங்கப்பட்ட, 877033473V என்ற இலக்கம் கொண்ட அடையாள அட்டையாலேயே இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விருவரும் தமது அடையாள அட்டைகளை 10 வருடங்களாகப் பயன்படுத்தியுள்ள அதேநேரம், இருவரும்...
பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாணத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ள வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், எதிர்வரும் 18ஆம் திகதி கிங்ஸ்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் கைச்சாத்திடவுள்ளதாக கிங்ஸ்டன் நகர சபையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துடன் இரட்டை நகரமாக இணைந்து கொள்ளவுள்ள பிரித்தானியாவின் கிங்ஸ்டன்...
அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் என ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார். புதிய அரசியல் யாப்பிலும் பௌத்த மதத்திற்கு தற்போதைய அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை அவ்வாறே பேணுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் முழுமையான இணக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்....
வடக்கின் பிரதான வீதி வலையமைப்பை உருவாக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிதின் கட்கரியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லி சென்றிருந்த போது, அவர் தங்கியிருந்த தாஜ் விடுதியில், இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா...
Loading posts...
All posts loaded
No more posts
