Ad Widget

‘எழுந்து நிற்போம்’ யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

யாழில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘எழுந்து நிற்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் ஒன்றிணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும் ஜோன் பொஸ்கோ கல்லூரி, யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகள் மற்றும் யாழ்.மாநகரசபை ஆகியவற்றிலும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

வட மாகாணத்தில் குறிப்பாக யாழில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் வாகன விபத்துக்களால் பலரது உயிர் காவுகொள்ளப்பட்டுள்ள நிலையில், இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டது.

வாகன விபத்துக்களை தடுப்பதற்கு வேகத் தடைகளை ஏற்படுத்தல் மற்றும் தேவையற்ற வீதித் தடைகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென அண்மையில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts