நல்லூர் பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகவியலாளர் பலவந்தமாக வெளியேற்றம்!

நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பொதுமக்கள் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் மாவை சேனாதிராஜாவை சமரரியாக கேள்வி கேட்கத்தொடங்கினர். ஆரம்பம் முதல் செய்தியாளர் கைத்தொலைபேசியில்...

‘ஈழத்துக்காக இசைக்கச்சேரி நடத்தினேன்’ : கங்கை அமரன்

தமிழக முதலமைச்சராக எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) இருந்த வேளை ஈழத்தமிழ் மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்துமாறு எங்களுக்குக் கூறினார். அதற்கிணங்க வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தோம் என இசையமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு நடைபெற்ற 'நண்பேண்டா' இசை நிகழ்ச்சியில்...
Ad Widget

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்ட இலவச இசைக்கச்சேரிக்குத் தயார்

“இலங்கையில் இசைக் கல்லூரி ஒன்றை அமைத்து, இசையில் ஆர்வமுள்ளவர்களை அதில் பயிற்றுவித்து முன்னேற்றுவதற்கான வழிவகைகளைச் செய்வோம்” என்றும் “போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக இலவச இசை நிகழ்வு நடத்த தயாராக உள்ளோம்” என யாழ்ப்பாணம் வந்துள்ள தென்னிந்தியப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் தெரிவித்தனர். ஜெட்வின் ஹோட்டலில் நேற்று...

விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்த ஒழுக்கம் மரணித்துவிட்டது

வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ்ப் பிரதேசங்களில் மதுபானப் பாவனை அதிகரித்துள்ளது. கலாசார சீர்கேடுகளும், இளைஞர்கள் மத்தியில் பழிவாங்கும் மனோநிலையும் அதிகரித்துள்ளமை கவலையளிக்கிறது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு தொகுதித் தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன், விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் வடக்கு, கிழக்கு எங்கும் இருந்த...

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல்: மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு ஐ.ஜி.பிக்கு கடிதம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டமையால், தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமான பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானமே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்து, பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) பூஜித் ஜயசுந்தரவுக்கு, கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானம்...

தாயின் கவனயீனத்தால் சிசு பலி

தாயின் கவனயீன செயற்பாடு காரணமாக, பிறந்து 45 நாட்களான,சிவச்செல்வன் கேசவி என்ற பெண் சிசு மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம், சனிக்கிழமை மாலை (08) நாவாலி தெற்கு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குழந்தைக்கு பால் கொடுத்த தாய், ஏணையில் போட்டு விட்டு தனது வேலைகளை கவனித்துள்ளார். ஏணையில் போடப்பட்டிருந்த துணி, காற்று காரணமாக பிள்ளையின் முகத்தின்...

ஜேர்மன் தூதுவர் வடக்கு முதல்வர் சந்திப்பு

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் டோடேம் (Jorn rohdem) நேற்று யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இவர் நேற்று மாலை 05.00 மணியளவில் யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு சென்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, வட மாகாணத்தில் ஜேர்மன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், மாவட்ட...

கொக்குவில் இந்துக்கல்லூரி பரிசளிப்புவிழாவில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாக்கிருஸ்ணன்!

யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் கல்லூரி பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் ஞானகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், சிறப்பு விருந்தினராக இந்து சமய கலாசார பணிப்பாளர் உமாமகேஸ்வரன் கௌரவ விருந்தினராக கு. ஜெயந்தன்,...

நாவற்குழி பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை

நாவற்குழி பகுதியில் சனிக்கிழமை (08) இரவு, குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான க.சந்திரசேனரன் (வயது 42) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பஸ்தர் வேலைக்குச் சென்று சைக்கிளில் வீடு திரும்பும் போது, அவரை வழிமறித்த சிலர் இந்த...

யாழில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி..பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் கங்கையமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்தை சனிக்கிழமை வந்தடைந்தனர். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இருவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்புடன் இருவரும் யாழ். நகரை சுற்றி பார்வையிட்டனர். இதன்போது பாடகர் எஸ்.பி.பி.பாலசுப்பிரமணியம், 'இலங்கையில் எனக்கு அதிகமாக ரசிகர்கள் உள்ளனர். அவர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி' என தெரிவித்தார். இன்று...

வவுனியாவில் குண்டுகள் மீட்பு

வவுனியா அலகல்ல அலுத்கம காட்டுப்பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (09) காலை ஆர்.பி.ஜி ரக குண்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். அலகல்ல, அலுக்கம காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதோரால் சனிக்கிழமை (08) தீ வைக்கப்பட்டுள்ளதுடன் இரவு வேளை பாரிய குண்டுச்சத்தம் கேட்டுள்ளது. அதனையடுத்து, குறித்த பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை (09) காலை பிரதேச மக்கள் சென்று பார்வையிட்டதுடன், பொலிஸாருக்கு...

‘பொலிஸார் தவறினால் எனக்கு அழையுங்கள்’ பொலிஸ்மா அதிபர்

பொதுமக்கள் வழங்கும் மிகவும் முக்கியமான முறைப்பாடுகளுக்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவார்களாயின், அது தொடர்பில் தனது தனிப்பட்ட அலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நேற்றுச் சனிக்கிழமை (08) அறிவித்துள்ளார். ஏதாவது முக்கியமான விடயங்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்களம், நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது என, பொது மக்கள் எண்ணினால், 0718592020 என்ற...

மோசடி திருமணம் செய்த நபருக்கும் பதிவாளருக்கும் விளக்கமறியல்!!

முதல் திருமணத்தை மறைத்து பிரான்ஸ் குடியுரிமை பெற்ற யுவதியை திருமணம் செய்து, 45 இலட்சம் சீதனமும் வாங்கிய ஆசாமியும், பதிவுத்திருமணம் செய்து வைத்த பதிவாளரும் நேற்று பொலிசாரிடம் சிக்கியுள்ளனர். கைதான இருவரையும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தியபோது எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தென்பகுதியை சேர்ந்த தமிழ் பெண்ணொருவரும் யாழ் வாலிபரும்...

நீர்ப்பாசனக்கால்வாய் துப்பரவு பணியில் 1000 இராணுவத்தினர்!!

வடமாகாணத்தின் இரண்டாவது பெரிய நீர்ப்பாசனகுளமான வவுனிக்குளம் 2350 வருடங்கள் பழமையானது. எல்லாள மன்னனினால் கட்டப்பட்டதுதாக கூறப்படுகிறது. யுத்தம் காரணமாக கால்வாய்கள் உடைபெடுத்தநிலையில் காணப்பட்டதனால் இராணுவத்தின் 65 வது பிரிவின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் 1000 இராணுவம் வீரர்களைக் கொண்டும் பொதுமக்களின் ஒத்துழைப்புக் கொண்டும் 20 கிலோமீற்றர் தூரம் கொண்ட வலதுகரை நீர்ப்பாசனக்கால்வாய் துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தின் கனரகவாகனங்களின்...

கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் வெடிப்பது நிச்சயம்: சுரேஷ்

தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வுத்திட்டம் ஏற்படுத்தப்படாவிடின் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் தோற்றம் பெறுவது நிச்சயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பின் தலைமை...

புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதியை சேகரிக்கும் மூன்றாம் நாள் பேரணி ஆரம்பம்

பருத்தித்துறை முதல் ஹம்பாந்தோட்டையின் தேவேந்திரமுனை வரையிலான நடை பவனி மூன்றாம் நாளாக இன்றைய தினம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி யாழ்ப்பாண கொடிகாமம்வரை சென்றடையவுள்ளது. கராப்பிட்டியவில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் விசேட நடைபவனியொன்று கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை புனித சேவியர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது. தேவேந்திரமுனை வரையிலான இந்த நடை...

ஓய்வுபெறுவதற்கு இன்று முதல் இணையம் மூலம் பதிவு செய்யலாம்

ஓய்வுபெறுவதற்காக ஒன்லைன் முறையில் பதிவு செய்துகொள்ளும் வழிமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இந்த வழிமுறை ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் குறிப்பிட்டார். ‘மகிழ்வுடன் இளைப்பாறுங்கள்’ என்பதே இம்முறை ஓய்வூதிய தினத்தின் தொனிப்பொருளாகும். நாட்டில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான ஓய்வுபெற்றவர்கள் இருப்பதாக...

வட மாகாண முதலமைச்சர் என்ன கூறினாலும் பாராளுமன்றமே இறுதித் தீர்மானத்தை எடுக்கும்: பிரதமர்

வட மாகாண முதலமைச்சர் என்ன கூறினாலும் பாராளுமன்றமே இறுதித் தீர்மானத்தை முன்னெக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சரின் அறிவிப்பு தொடர்பில் தினேஷ் குணவர்தன எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் முன்வைத்த வினாவுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறினார். விக்னேஷ்வரன் என்ன அறிவிப்புச் செய்திருந்தாலும் நாம் எமக்குத் தேவையான பிரகாரம் அரசியல் யாப்பை...

வடமாகாண பாதுகாப்பு உச்ச அளவில் உள்ளது; பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

வடமாகாணத்தின் பாதுகாப்பு உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்பதாகவும் குறிப்பிட்ட அவர், வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் உரியவர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுவரும் நிலையில் அவற்றில் சிறிதளவேனும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கோ அல்லது இனவாதிகளுக்கோ வழங்கப்படாது என்றும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பு இராஜாங்க...

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் ஊழல், மோசடிகளை விசாரணை செய்ய புதிய குழு!

வடக்கு மாகாண அமைச்சர்களின் ஊழல், மோசடிகளை விசாரணை செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் மூவர் கொண்ட விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவர்கள் தொடர்பாக தபால் மூலமோ அல்லது நேரிலோ தெரிவிக்கமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்பாக தனக்கு...
Loading posts...

All posts loaded

No more posts