ரெலோ அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கவிஞர் பொன்காந்தன் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
அயல் வீட்டாருடன் நீண்டகாலமாக காணிப் பிணக்கு எற்பட்டுவந்துள்ளதோடு நேற்றய தினம் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த கைகலப்பின்போது உடைக்கப்பட்ட கண்ணாடி போத்தலினால் கவிஞர் பொன்காந்தன் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.