Ad Widget

கல்விக்கும், சுகாதாரத்திற்கும் கூடுதலான நிதி ஒதுக்கவேண்டும்!

கடந்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு மிக கூடுதலான நிதியினை ஒதுக்குகின்றார்கள் அதனை போன்றுதான் இம்முறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியம் கொடுக்காது எதிர்வரும் ஆண்டுகளில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் கூடுதலான நிதியினை ஒதுக்கவேண்டும் என்று பணிவான வேண்டுகோளை விடுக்கின்றேன் என, சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ் தெல்லிப்பளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய கல்வி வீழ்ச்சி அடைந்துள்ளது. சில பாடசாலைகளை எடுத்துக்கொண்டால் இன்னும் மலசல கூட வசதிகள் இல்லாமல் இருக்கின்றது. அதனை போன்று மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இன்னும் தளபாடவசதிகள் இல்லாமல் இருக்கின்றது. அதனை போன்று ஆசிரியர் பற்றக்குறை இருக்கின்றது.

நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க, இந்து விவகார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் முஸ்ஸிம் விவாகார மற்றும் தபால் துறை அமைச்சர் கலீம் ஆகியோர்கள் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts