‘முஸ்லீம் தலைமைகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – அயூப் அஸ்வின்

முஸ்லிம் தலைமைகளின் மீது முஸ்லிம் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதை ஊவா மாகாண சபை தேர்தலில் தெளிவாக வெளிக்காட்டியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்வின் தெரிவித்தார். (more…)

நீர்த்தாங்கிகள் வழங்கிய ஆளுநர்

யாழ்., மாவட்டத்திலுள்ள ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் கிளிநொச்சியின் பூநகரி, கரைச்சி பிரதேச சபைகள் ஆகியவற்றிற்கு 25 நீர்த்தாங்கிகளை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வியாழக்கிழமை (25) வழங்கினார். (more…)
Ad Widget

10 ஆம் திகதிக்கு முன் வேலையை முடிக்கவும் : உத்தரவிட்டார் ஆளுநர்

பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள புகையிரத நிலையங்களின் பணிகளை முடிக்குமாறு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். (more…)

மன்னார் விவசாயிகளுக்கு 1.5 மில்லியன் ரூபா செலவில் விவசாய உள்ளீடுகள்

வடமாகாண விவசாய அமைச்சுக்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்தில் இருந்து 1.5 மில்லியன் ரூபா செலவில் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (23.09.2014) நடைபெற்றது. (more…)

சாவகச்சேரியில் விசேட சுகாதார நடைமுறைகள்

சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கும் பொருட்டு 5 சுகாதார திட்டங்கள் செயற்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி பிரதேச சுகாதார குழுத்தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோர் இன்று வியாழக்கிழமை (25) தெரிவித்தார். (more…)

இராணுவ பஸ் மோதி விபத்து: பெண் பலி

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் இன்று வியாழக்கிழமை(25) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 30ம் திகதி

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரிட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேநீருக்குப் பதிலாக இலைக்கஞ்சி

இன்றைய 16வது மாகாண சபை அமர்வு இடைவேளையின் போது தேநீருக்குப் பதிலாக இலைக்கஞ்சி வழங்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண சபையின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காத அதிகாரிகள்

வடமாகாண சபையின் இன்றைய அமர்விலும் வடமாகாண சபையின் திணைக்களங்களின் கீழுள்ள அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை. (more…)

மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் குறித்து மஹிந்த அதிருப்தி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். (more…)

23 எறிகணை குண்டுகள் மீட்பு

சாவகச்சேரி, சரசாலை பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து 120 மில்லிமீற்றர் ரக எறிகணைகள் 23, புதன்கிழமை (24) மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். (more…)

எடுத்துக் கொள்ளப்படாத பிரேரணை! கறுப்புப் பட்டியுடன் ஆஜரான சிவாஜிலிங்கம்

சிவாஜிலிங்கத்தின் ஒரு பிரேரணை வடக்கு மாகாணசபையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. (more…)

யாழில் 25 பேருக்கு டெங்கு

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த ஓகஸ்ட் மாதம் 25 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். மாநகரசபை சுகாதார வைத்தியதிகாரி நேற்று புதன்கிழமை(24) தெரிவித்தார். (more…)

பருத்தித்துறைக் கடலில் சிக்கிய ராட்சதத் திருக்கை

முல்லைத்தீவுக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 1000 கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை மீன் மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் பா. ரமேஷ் கண்ணா நேற்று புதன்கிழமை தெரிவித்தார். (more…)

பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா!

பாராளுமன்ற கேட்போர்கூடத்தில் இன்றுகாலை (25) 10.00 மணிக்கு நவராத்திரி விழா கொண்டாடப்படவுள்ளது. (more…)

ஆயுதம் தாங்கிய விமானங்கள் குறித்து ஐ.நா. மனித அமர்வில் இலங்கை அதிருப்தி

தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான உத்தியாக, சர்வதேச நாடுகள், விமானிகள் இல்லாத தன்னியக்க விமானம் மற்றும் ஆயுதம் ஏந்திய விமானங்களின் பாவனையை அதிகரித்து வருகின்றமை (more…)

ஐ.நாவில் இலங்கை விவகாரம் ஒத்திவைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பிலான வாய்வழி மூலமான புதுப்பித்தல்கள் (Oral update) (more…)

தடம்புரண்டது யாழ்தேவி

பளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ்தேவி ரயில் மஹவ பிரதேசத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

சிறுவர் இல்லத்தில் கைவரிசை: இருவர் கைது

யாழ்ப்பாணம் மானிப்பாயிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்த நான்கு மின்விசிறிகளை திங்கட்கிழமை(22) இரவு திருடிய குற்றச்சாட்டில் மானிப்பாயை சேர்ந்த இளைஞர்கள் இருவரை செவ்வாய்க்கிழமை(23) மாலை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் புதன்கிழமை (24) தெரிவித்தனர். (more…)

ஜனாதிபதி மஹிந்த சர்வதேச தலைவர்களுடன் சந்திப்பு!

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts