Ad Widget

ஜனாதிபதியின் நிகழ்வுகளில் கலந்துகொள்ள கூட்டமைப்பிற்கு அழைப்பில்லை

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருடைய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கான அழைப்பு இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்கவில்லை என அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

sambanthan-mahintha

எதிர்வரும் 12, 13, 14 ஆகிய நாட்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளனர். இந்நிலையில் இவ்விஜயத்தின் பொழுது இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கலந்து கொள்ளுமா எனக் கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தின் பொழுது கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். இதேபோல் இம்மாகாணத்தின் மீளாய்வு தொடர்பான அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் கலந்துகொள்வுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இன்னமும் அழைப்புக் கிடைக்கவில்லை எனவும் அவ்வாறான சூழலில் தமது நிலைப்பாடு தொடர்பாக ஓரிரு நாட்களில் வடமாகாண முதலமைச்சரின் ஊடாக தெரியப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் அளித்த வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை எனவும் வடமாகாண சபையின் முன்னேற்றங்களுக்கு மத்திய அரசாங்கம் தடையாகவுள்ளது எனவும் வடமாகாணசபை பகிரங்கமாகக் குற்றம் சாட்டிவருகின்ற நிலையில் ஜனாதிபதியின் வடக்கு விஜயம் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் பொழுது பொது நிகழ்வுகளைப் புறக்கணித்து அபிவிருத்திக் கூட்டத்தில் மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என விடயமறிந்தவர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts