சமுர்த்தி பயனாளிகளின் செழிப்பான இல்லத்துக்கு நிதியுதவி

யாழ். மாவட்டத்திலுள்ள 53 ஆயிரத்து 907 சமுர்த்தி பயனாளிகளுக்கு செழிப்பான இல்லத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் நல உதவி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் எஸ்.ரகுநாதன் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது, யாழ். மாவட்டத்தில் உள்ள 33 சமுதாய...

நீர்ப்பாசன திணைக்களத்தின் அசட்டுத்தன்மை!! காரைநகரில் 60 குடும்பங்கள் இடம்பெயர்வு

கரைநகர் - களபூமி பகுதியில் வீடுகளுக்குள் 3 அடி உயரத்தில் வெள்ளநீர் புகுந்தமையால் 60 குடும்பங்கள் இடம்பெயர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியின் நன்னீர் திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி கிராமத்துக்கும் கடலுக்கும் நடுவில் அணைக்கட்டு ஒன்று, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 40 மில்லியன் ரூபாய் நிதியுதவியின் கீழ் நீர்ப்பாசன திணைக்களத்தால் நிர்மாணிக்கப்பட்டு,...
Ad Widget

த.தே.கூ. முடிவெடுக்கவில்லை – சுமந்திரன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையிலும் முடிவெடுக்கவில்லை என்று அக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர், விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் மீண்டும் கட்டியெழுப்பவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

தனியார் வகுப்புகளுக்கு தடை

இவ்வருடம் 2014ஆம் ஆண்டுக்கான க.பொ.சதாரண தரப்பரீட்சைக்காக தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள் இன்று புதன்கிழமை (03) நள்ளிரவுடன் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09) க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், மாணவர்களுக்கான க.பொ.சாதாரண தர அனுமதி அட்டைகள், அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனியார் பரீட்சாத்திகளுக்கான அனுமதி...

புலிகளால் எரியூட்டப்பட்ட 80பேர் தொடர்பில் தடயவியல் ஆய்வு

போர் நிறுத்தக் காலப்பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாகக் கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஜயரத்னம் மற்றும் இராணுவ கெப்டன் லக்கீ ஆகியோர் உள்ளடங்கலான 80பேர் தொடர்பான தடயவியல் ஆய்வு நேற்று செவ்வாய்க்கிழமை (02) ஆரம்பிக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட ஒட்டுசுட்டான், இந்திமடு, சமளன்குளம் ஆகிய பகுதிகளில், கடந்த 2006ஆம் ஆண்டு...

கூட்டமைப்பிடம் ஆதரவு கோரியுள்ள எதிரணி

ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய உடன்பாடு ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது. இவ்வாறு எதிரணியில் பௌத்த கடும்போக்கு அமைப்புகள் என்று கருதப்படும்...

மைத்திரிபால சிறிசேன ராஜபக்‌ச படையணியை விரட்டுவார் – ரணில்

ராஜபக்‌ச படையணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மைத்திரிபால சிறிசேனவை நாம் பொது வேட்பாளராகக் களமிறக்கிப் போராட்டம் செய்கின்றோம், என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கெளதம புத்தர் சமாதானமாக ஒன்று கூடுங்கள், சமாதானமாகப் பேசுங்கள், சமாதானமாகக் கலைந்து செல்லுங்கள் எனப் போதனை செய்தார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தலைமையிலான அரசினர்...

அன்னம் சின்னத்தில் போட்டியிடுகிறார் மைத்திரி!

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும், மைத்திரிபால சிறிசேன சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல்கள் செயலகத்தில் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். புதிய ஜனநாயக முன்னணிக் கட்சியில் அன்னம் சின்னத்தில் மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

சர்வதேச தரத்தில் யாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம்

சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசின் உதவியுடன் சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை யாழ். அரியாலைப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜோசப் ஷெப் பிளாட்டர் பிற்பகல் 1.50 மணியளவில் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர், மத்திய...

தேசிய கல்வியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த அழகியல் பாடங்களை அடுத்த ஆண்டுமுதல் கற்பிக்க நடவடிக்கை – டக்ளஸ்

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த அழகியல் பாடங்களை அடுத்த ஆண்டுமுதல் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, மேலும் கல்லூரியின் வளங்களை மேலும் நிறைவு செய்து சிறப்பான வளங்களோடு இயங்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு...

இயற்கையால் பாதிக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – ஈ.பி.டி.பி

இயற்கை தாண்டவத்தால் பாதிப்புக்குள்ளான ஏழை மக்களின் அன்றாட வாழ்வியலை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒருபோதும் விரும்புவதில்லை என அந்த கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட வலி.வடக்கு மக்களை திங்கட்கிழமை (01) மாலை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர்,...

சுகாதார தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ். மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள் மாநகர முன்றலில் பணி புறக்கணிப்பு போராட்டமொன்றை இன்று (02) மேற்கொண்டனர். சுகாதார தொழிலாளர்களாகிய தங்களை வீதி புனரமைப்பு வேலைக்கு அனுப்பியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை சுகாதார தொழிலாளர்கள் மேற்கொண்டனர். இது தொடர்பில் தெரியவருதாவது, யாழ். மாநகர சபையின் சுகாதார பணிமனையில் பணியாற்றுவதற்காக 22 பெண், 55...

வீதியில் உணவு சமைத்து போராட்டம்

யாழ்ப்பாணம், பொம்மாவெளி, முதலாம் குறுக்குதெரு ஜே - 87 கிராமஅலுவலர் எல்லைக்குட்பட்ட முஸ்லிம் மக்கள், வீதியில் உணவு சமைத்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை (02) முன்னெடுத்தனர். கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால், 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அன்றாட உணவுகளை...

ஜனாதிபதி – டோவல் சந்தித்து பேச்சு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாக்டர் அஜித் குமார் டோவல் இன்று செவ்வாய்கிழமை(02) காலை கொழும்பிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் சந்தித்து பேசினார். இதன்போது இலங்கை - இந்திய உறவுகள் தொடர்பில் டோவல் திருப்தி தெரிவித்துள்ளதுடன் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியுள்ளார்.

தொடர்ந்து கொட்டும் மழையால் யாழ்.மாவட்டத்தில் 32 ஆயிரம் பேர் பாதிப்பு!

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக யாழ்.மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 47 குடும்பங்களைச் சேர்ந்த 32 ஆயிரத்து 647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் 501 குடும்பங்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளன. யாழ். மாவட்டத்தில் உள்ள 11 முகாம்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்னர். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 4 முகாம்களிலும், யாழ்....

யாழ் உப இந்திய தூதரகத்திற்கு புதிய கொன்சியுலர் ஜெனரல்

கடந்த மூன்று வருடங்களாக கண்டி இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிய ஏ.நடராஜா யாழ் இந்திய துணைத் தூதரககத்தின் கொன்சியுலர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் யாழ் உப உயர்ஸ்தானிகராலயத்தில் பதவியேற்கவுள்ள அவர் கண்டியில் பணியை நிறைவு செய்ததன் பின்னர் கண்டி மாவட்டச் செயலாளர் எச்.எம். காமினி செனவிரத்னவை சந்தித்து சேவை காலத்தில்...

சிறுவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது தடுக்கப்படல் வேண்டும் – சூசையானந்தன்

சிறுவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது சட்டபூர்வமாக தடுக்கப்பட வேண்டும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஏ.எஸ்.சூசையானந்தன் திங்கட்கிழமை (01) தெரிவித்தார். சிறுவர் தொழிலாளர்கள் பற்றி கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சிறுவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். கடற்றொழில் மிகவும் கடினமான ஒரு தொழில். சிறுவர்கள்...

டெங்கு ஒழிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம்!

இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் இளவாலை கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தபட்டு, டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. கிராம மக்கள் அனைவருக்கும் ஒலிபெருக்கி மூலமாக டெங்கு நுளம்பு பெருக தக்க கழிவுப்பொருட்களை சேகரித்து பொதி செய்து வைத்துகொள்ளுமாறு முன்னதாகவே அறிவுறுத்தபட்டு, வலிவடக்கு பிரதேச சபையின் வாகனத்தின் உதவியுடன் வருத்தப்படாத வாலிபர் சங்க...

கூட்டமைப்பினரை சந்தித்த அஜித் டோவால்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தனித்தனியே சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மாலை இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுடனான சாந்திபில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், ஜனாதிபதி தேர்தல் குறித்து இதன்போது...

எனது அரசில் குறைகள் உண்டு – மகிந்த

ஆட்சியிலுள்ள அரசில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழ்ந்து வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கப்பம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஊடகவியலாளர்களில் 70 வீதமானவர்கள் அரசிற்கு விரோதமான வகையிலேயே இவர்கள் தகவல்களை வெளியிடுகின்றனர். நீதிமன்றின் நடவடிக்கைகளுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் தலை வணங்குகின்றேன்....
Loading posts...

All posts loaded

No more posts