Ad Widget

நாம் தோற்றுப்போனவர்கள் அல்ல – மாவை

எமது இனம் தோற்றுப்போன இனமல்ல. நாங்கள் நிமிர்பவர்கள் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சி கண்டாவளை உழவனூர் கிராம அபிவிருத்தி சங்கத்தில் திங்கட்கிழமை (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், ‘நாம் தோற்றுப்போனவர்களல்ல. முள்ளிவாய்க்காலில் மடிந்து போனவர்களல்ல. நாம் நிமிர்கின்றவர்கள். எமது மண்ணில் எமது அடையாளங்களை அழித்து, பௌத்த சின்னங்களை ஆக்கிரமிப்புக்காக பயன்படுத்தி இராணுவத்தினரையும் சிங்கள விவசாயிகளையும் இங்கே குடியேற்றி, எம்மை அழிக்க திட்டமிடுகின்ற ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் இருக்கின்றார்கள்’ என்றார்.

‘எனவே, நாம் பேசுகின்ற, எழுதுகின்ற தாய் மொழியை உணர்ந்து நாம் தமிழர்களாக வாழவேண்டியது எமது கடமை. அதன்மூலம் நாம் நமது மண்ணில் சுதந்திரமானவர்களாக வாழுகின்ற, ஆளுகின்ற வாய்ப்பு கிடைக்கும்’ என மாவை தெரிவித்தார்.

Related Posts