உபதவிசாளரின் உருவப்பொம்மை எரிப்பு

வலிகாமம் மேற்கு (சங்கானை) பிரதேச சபையின் உபதவிசாளர் எஸ்.சிவரஞ்சனுடைய உருவப்பொம்மை, இந்த பிரதேச சபைக்குட்பட்ட பிரான்பற்று, பல்லசுட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்களால் சங்கானை பிரதேச சபைக்கு முன்பாக வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை எரிக்கப்பட்டது. (more…)

பொலிஸாரின் உதவியுடன் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் – அனந்தி

பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டுவதன் மூலம் வடமாகாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இன்று (25) தெரிவித்தார். (more…)
Ad Widget

வடக்கு தேர்தல் நீதியானதல்ல என நிரூபித்தால் பதவிதுறப்பேன்

வடமாகாண சபைக்கான தேர்தல், நீதியானதும் சுதந்திரமானதுமான முறையில் நடைபெறவில்லை என்று பொதுநலவாய அமையத்தின் அதிகாரிகள் நிரூபித்தால் நான் உடனடியாக பதவிவிலகுவேன் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். (more…)

சர்வாதிகாரத்தை உடைக்க 23, 24 சரியான நாட்கள் – மைத்திரி

சர்வாதிகாரத்தை உடைப்பதற்கு அரசாங்க ஊழியர்கள் டிசெம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். (more…)

மைத்திரிபாலவினால் வழங்கப்பட்ட நியமனங்கள் ரத்து

முன்னாள் சுகாதார அமைச்சரும் எதிரணியின் பொது வேட்பாளரருமான மைத்திரிபால சிறிசேனவினால் கொடுக்கப்பட்ட சுகாதார திணைக்கள நியமனங்கள் யாவும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

நாவாந்துறையில் மீண்டும் மோதல் : பொலிஸார் மீது தாக்குதல்

யாழ்.நாவாந்துறை பகுதியில் மீண்டும் குழு மோதல் மூண்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கடமையில் இருந்த இரு பொலிசாருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது. (more…)

தெற்கு முற்போக்கு சக்திகளுடன் சேரத் தயாராகிறது கூட்டமைப்பு

இன அடக்குமுறைக்கும் சர்வாதிகாரப்போக்கிற்கும் எதிராக எழுச்சி மிக்க சக்திகளோடு இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். (more…)

குடாநாட்டு ஆலயங்களில் பூசை விபரங்களை தீவிரமாகச் சேகரிக்கும் இராணுவம்

யாழ்.குடாநாட்டிலுள்ள ஆலயங்களில் எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள பூசை, வழிபாடுகள் தொடர்பான விபரங்களை இராணுவப் புலனாய்வாளர்கள் சேகரித்து வருகின்றனர். (more…)

இராணுவம் தடுத்தாலும் நாம் மாவீரர்களைப் பூசிப்போம்! – அனந்தி சசிதரன்

தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி வீர காவியமான போராளிகள் போற்றப்பட வேண்டியவர்கள். எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம்பிடித்திருக்கும் மாவீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம், (more…)

நேபாளத்துக்கு ஜனாதிபதி பயணமானார்

8ஆவது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேபாளத்தின் காத்மண்டுவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

திக்கம் வடிசாலைக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி – சீவரத்தினம்

திக்கம் வடிசாலையில் தேக்கமடைந்துள்ள மதுசாரத்தினை விற்பனை செய்வதற்கு என வடமராட்சி பனை , தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் கொத்தணிக்கு மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் வடிசாலையினை நடாத்துவதற்கு (more…)

மீரியபெத்தை மக்களிடம் சென்றடைந்தது ; வடக்கு அவையின் நிவாரணப் பொருட்கள்

கொஸ்லந்தை மீரியபெத்தயில் இடம்பெற்ற மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு மாகாண சபையினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் நேற்று மக்களிடம் கையிக்கப்பட்டுள்ளன. (more…)

மஹாநாயக்க தேரர்களைச் சந்தித்தார் மைத்திரிபால

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார். (more…)

இலங்கை அரசாங்கத்தின் பட்ஜெட் நிறைவேறியது

இலங்கை அரசாங்கத்தின் 2015-ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 95 பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. (more…)

நான் அரசுப்பக்கம் தாவப்போவதில்லை! செய்திகள் பொய்யானவை என்கிறார் திஸ்ஸ!

டுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் அரசுப் பக்கம் தாவுகிறேன் என்று வெளியான தகவல்கள் பொய்யானவை. நான் ஐ.தே.க.கட்சியிலிருந்த விலகப்போவத்தில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க. (more…)

மாணவரின் பாதுகாப்புக்கு உபவேந்தரும் உயர் கல்வி அமைச்சருமே பொறுப்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலை கண்டித்துள்ள முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சி, பல்கலைக்கழக உபவேந்தரும் உயர்கல்வி அமைச்சரும் இவற்றைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளது. (more…)

துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பெற்றோருக்கு அதிக கடப்பாடுகள் – பொறுப்பதிகாரி

சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவதை கட்டுப்படுத்துதற்கு பெற்றோர்களே அதிக கடப்பாட்டுடன் செயற்படவேண்டும். சிறுவர்களை துஸ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பது பெற்றோர்களின் கைகளில் உள்ளதாக (more…)

மகிந்தவுக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்த மைத்திரி !!

கோப்புக்களை வைத்துகொண்டு எந்த நேரமும் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்க முடியாது என ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் மகிந்தவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். (more…)

ஜனாதிபதி தேர்தலில் சுந்தரம் மகேந்திரன் போட்டி

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், நவ சம சமாஜ கட்சி சார்பாக சுந்தரம் மகேந்திரன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

நாவாந்துறையில் பொலிஸ், இராணுவம் குவிப்பு

மைலோ கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியின் போது, இரு அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பு காரணமாக, யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியின் பாதுகாப்பு பலப்படத்தப்பட்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்று நாவாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts