Ad Widget

யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

அண்மையில் பெய்த பருவ மழையையடுத்து யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சுகாதார திணைக்களம்சார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, திங்கட்கிழமை (15) தெரிவித்தார்.

யாழ். பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன், சுகாதார வைத்தியதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஆகியோருடன் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் சண்டிலிப்பாய், கோப்பாய், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் அதிகளவு டெங்கு தாக்கங்கள் அறியப்பட்டதையடுத்து, அவ்விடங்களில் எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து 3 நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காக சுகாதார துறைசார்ந்த அனைத்து ஆளணியினரும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் ஆளுநர் கூறினார்.

Related Posts