Ad Widget

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இடமாற்றம்

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா நேற்று திங்கட்கிழமையுடன் (15) யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பதவியிலிருந்து இடமாற்றம் பெற்றுச்செல்கின்றார்.

bavani

5 வருடகாலத்துக்கு ஒரு முறை இடம்பெறும் இடமாற்றத்தின் அடிப்படையில் இந்த இடமாற்றம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், அடுத்ததாக வவுனியா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யுமாறு தான் கோரியிருந்ததாகவும், இருந்தும் இதுவரையில் தனக்கு அது தொடர்பில் கடிதம் கிடைக்கவில்லையெனவும் பவானி தெரிவித்தார்.

அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் யார் என்பது தொடர்பிலும் தனக்கு தெரியாது எனவும் பவானி தெரிவித்தார்.

Related Posts