நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு விரைவில் சீராகும்: லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் காணப்பட்ட லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் 18ஆம் திகதிக்குள் முழுமையாகச் சீரடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சுமார் 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த கப்பல் வருகை தருவதில் ஏற்பட்ட தாமதமே இந்நிலைமைக்குக் காரணம் எனத் தெரிவித்த அந்நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன, தற்போது குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எரிவாயுவை இறக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Posts