வலிகாமம் வடக்கில் புதிய மதுபானசாலைக்குத் தடை கோரி பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம்!

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்றைத் திறப்பதற்கான அனுமதியைத் தடுக்குமாறு கோரும் தீர்மானம், வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் அமர்வு இன்று (16) சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமாரன் விஜயராஜ் குறித்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து, சபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த விவகாரம் அண்மையில் பெரும் பேசுபொருளாக இருந்து போராட்டங்கள் நடைபெற்ற் நிலையில், வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்றைத் திறப்பதற்கான அனுமதியைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டே இத்தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts