- Friday
- September 19th, 2025

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், அங்கஜன் இராமநாதனின் நீலப்படையணிக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (02) தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர், நீலப்படையணிக்கு வழங்கப்படும் உடையை பகிர்ந்தளிக்கும் போதே இக்கைகலப்பு ஏற்பட்டுள்ளது....

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை ஏசுவதாக நினைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏசிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றது. கூட்டத்துக்கு ஜனாதிபதி வருகை தர தாமதமாகியதால் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை...

தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் பல வாக்குறுதிகளை கொடுப்பார்களே தவிர, செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நான் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கமாட்டேன். சொல்வதை செய்வேன், அதனை கடந்த 9 வருடங்களில் செய்தும் காட்டியுள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ். ரில்கோ விடுதியில்...

யாழ்.நாவாந்துறைப் பகுதியில் வைத்து இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காலில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேயிடத்தை சேர்ந்த சந்திரகுமார் சஞ்சீவன் (வயது 30) என்பவரே படுகாயமடைந்தார். இரு குழுக்களுக்கிடையில் வெள்ளிக்கிழமை (02) இரவு இடம்பெற்ற கைகலப்பை கட்டுப்படுத்த சென்ற இராணுவத்தினரே நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நாவாந்துறை சந்தியில் இரு குழுக்களுக்கிடையில்...

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு என்பது தொடர்பாக தேர்தல்கள் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தங்களுக்குரியவரை புள்ளடியிட்டு வாக்களிப்பதா? அல்லது ஒன்று, இரண்டு, மூன்று என இலக்கமிட்டு வாக்களிப்பதா? என்பது குறித்து வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகின்றது. இது தொடர்பான விபரம் வருமாறு: வாக்காளர்கள் தனியொருவருக்குத் தமது வாக்கை அளிக்கலாம். அல்லது...

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி குறித்த அரச ஊழியர்கள் அருகில் உள்ள மாவட்ட தேர்தல்கள் செயலகத்திற்குச் சென்று வாக்களிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு – குறிகட்டுவான் படகு சேவையில் ஈடுபட்ட சமுத்திராதேவி படகு 3 மாதங்களின் பின்னர் மீண்டும் வெள்ளிக்கிழமை (02) சேவையில் ஈடுபடத் தொடங்கியது. நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் சமுத்திராதேவியின் படகு சேவையை மீண்டும் ஆரம்பித்து வைத்தார். சமுத்திராதேவி படகு கடந்த 2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அடித்தளம் சேதமடைந்ததால் சேவையில் ஈடுபடாமல் ஒதுங்கியது. பாரம்பரிய...

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இன்றைய தினம் (02) நடைபெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அழைப்பின் பேரில் எதிர்பாராத வகையில் கலந்து கொண்டிருந்த பெருந்திரளான எமது மக்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அதேநேரம், தாம் எதிர்பார்த்ததைவிட பன்மடங்கு அதிகமாக மக்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு...

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின் இன்று (02) யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களை சந்தித்து தேர்தல் தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். இதன் போது வாக்களிப்பு நிலையங்கள்...

மன்னார் மடு தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. தேர்தல் பரப்புரைக்காக மன்னார் மாவட்டத்திற்கு இன்று மாலை சென்றிருந்த மகிந்த ராஜபக்ச மடு தேவாலயத்திற்குச் சென்று மடு அன்னையை வழிபட்டுள்ளார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஜனாதிபதியை வரவேற்றதுடன் அங்கு இடம்பெற்ற ஆராதனையிலும் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டார். மேலும் வழிபாடுகளை முடித்துக்...

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி கலந்து கொண்டிருந்தார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தேர்தல் பரப்புரைக்கூட்டம் இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது . இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியும் தேர்தல்...

சந்தாதாரர்களின் சம்மதமின்றி அலைபேசி வலையமைப்புகளூடாக தேர்தல் பிரசாரம் செய்வதை தவிர்க்குமாறு சகல வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். வாக்களிப்புக்கு 48மணிநேரத்துக்கு முன்னளர் செய்யப்படும் இவ்வாறான பிரசாரங்கள் தேர்தல் சட்டங்களை மீறியதாக கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் ஆதரிக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பும் திட்டமிட்ட செயற்பாடுகள் பற்றி முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மஹிந்த...

பொது எதிரணி வேட்பாளர் மைத்திபால சிறிசேனவை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். அவர் ஒரு தடவைகூடு இந்தப் பகுதிக்கு வரவில்லை. ஆனால் நான் எனது இளவயதிலிருந்தே உங்களைத் தெரிந்துவைத்திருக்கிறேன். உங்கள் இடத்துக்கு வந்து சென்றிருக்கிறேன். 1970ஆம் ஆண்டு நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது யாழ்ப்பாணம் வந்தேன். அதாவது 11 தடவைகள் நான் யாழ்ப்பாணம் வந்திருக்கிறேன். உங்களுக்கு...

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ சேவையினை அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, குமார வெல்கம, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஆரம்பித்து வைத்துள்ள அதேவேளை, உத்தியோகபூர்வ பயணத்திலும் பங்கேற்றிருந்தனர். 2011 ஆம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி ஓமந்தை வரையும்,...

வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் வெள்ளிக்கிழமை (02) காலையில் திடீரென மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, அனந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏசியதாலேயே அவர் மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது. அனந்தியை தொடர்புகொண்ட போது, அவர் மயக்கமடைந்து உடல் நலம் குன்றியிருப்பதாக அவரது வீட்டிலுள்ளவர்கள் தெரிவித்தனர்....

பாவனைக்கு உதவாத சுகாதார சீர்கேடான முறையில் விற்பனை செய்யப்பட்ட 500 இடியப்பங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அழிக்கப்பட்டுள்ளன. வருடாந்த அடிப்படையில் குறித்த நிறுவனத்துக்கு சிற்றுண்டிச் சாலை நடத்துவதற்குரிய அனுமதி இரு வாரங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டிருந்தது. இந்த வகையில் இளையான்கள் மொய்க்கும் வகையில் சுமார் 500 இடியப்பங்கள் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டதையடுத்து குறித்த சிற்றுண்டிச் சாலை நடத்துநருக்கு அது...

தேர்தல் பிரசாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பலாலியில் வைத்து வரவேற்றார். ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்திற்காக வேட்பாளரும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி...

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் அடிகாயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாகக் காணப்பட்டவர் வவுனியா, கத்தார் சின்னக்குளத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எஸ்.ரெனி (வயது 37) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேசன் வேலைசெய்து வரும் இவர் கனகராயன்குளம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். வீட்டு உரிமையாளர் நேற்று நண்பகல்...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் என கூறப்படுவதில் கள்ள கையொப்பம் இடப்பட்டுள்ளதாக கூறப்பட்டதையடுத்து, அது தொடர்பில் நிபுணர்களில் அபிப்பிராயத்தை பெறுமாறு குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதையடுத்து, இந்த கட்டளை...

வடக்கிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சபை ஒன்றுகூடலின் போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பில் முடிவுற்றது. இதில் இரு தரப்பு உறுப்பினர்களும் காயம் அடைந்து இரத்த காயத்துடன் பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தனர். இச்சம்பவம் இடம்பெற்று சில வாரங்களின் பின் இடம்பெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக்கொண்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் முக்கிய இரு...

All posts loaded
No more posts