Ad Widget

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை இடைநிறுத்தம்

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நெடுஞ்சாலைக்கான முழுமையான செலவுகளை ஆராய்ந்து பார்ப்பதற்காவே இந்த பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ravi-karunayakka

6 ஆயிரத்து 750 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் செங்கடகல நுழைவாயிலுக்கான அடிக்கல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாட்டப்பட்டது.

300 கிலோமீற்றர் நீலத்தைக் கொண்ட இந்த நெடுஞ்சாலையானது, நான்கு கட்டங்களாக நிர்மாணிக்க ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

முதற்கட்டமாக, என்டேரமுல்லயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலும், இரண்டாம் கட்டமாக குருநாகல் முதல் பெலெந்தெனிய வரையிலும், மூன்றாம் கட்டமாக தம்புள்ளை வரையிலும் நான்காம் கட்டமாக தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும் நிர்மாணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த திட்டத்தை அமுலாக்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டதன் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும்என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

Related Posts