Ad Widget

விக்னேஸ்வரன் புதிய ஜனாதிபதியை சந்திக்கலாம்?

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வடமாகாண அபிவிருத்தி சம்பந்தமாகவோ அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகவோ புதிய ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட வாய்ப்புக்கள் உள்ளதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

SURESH_PREMACHANDR

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் அவரை வடமாகாண முதல்வர் உத்தியோகபூர்வமாக சந்தித்து உரையாடவுள்ளாரா என கேட்ட போது சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இனப்பிரச்சினை அரசியல் தீர்வு மீள்குடியேற்ற விவகாரங்கள் மற்றும் இதர விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்களை எடுப்பதற்கோ முடிவுகளை மேற்கொள்வதற்கோ கூட்டமைப்பில் விசேட குழுவொன்று இயங்கி வருவதை அனைவரும் அறிவர்.

அந்த விடயங்கள் தொடர்பில் எவருடனும் கலந்துரையாடுவதற்கோ கருத்துக்களைத் தெரிவிப்பதற்கோ மேற்படி குழு அதிகாரம் கொண்டதாக இருக்கின்றது என்பது ஒரு தெளிவான விடயமாகும்.

வடமாகாணத்தின் அபிவிருத்திகள் அதிகாரப் பகிர்வு உட்பட்ட இன்னோரன்ன விடயங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கு பூரண சுதந்திரம் கொண்டவராக முதலமைச்சர் செயற்பட்டு வருகிறார்.

இதில் அபிப்பிராய பேதங்களுக்கு இடமில்லை. வடக்கைப் பொறுத்தவரை நிலவி வருகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றார்.

Related Posts