- Wednesday
- July 9th, 2025

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்படும் பதாகைகளை அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவித்தாட்சிகரும் மாவட்டச் செயலாளருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். தேர்தல் நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ்.மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல்...

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் நிலவும் இரண்டு உறுப்பினர்களுக்கான வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடமிருந்து அறிவித்தல் வந்தவுடன் நியமிக்கப்படுவார்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், 16 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்)...

யாழ். கொடிகாமம் பகுதியில் நடைபெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 04.15 அளவில் நடைபெற்ற இந்த விபத்தில் கொடிகாமத்தைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயான சுதன் சுதா (வயது 35) என்பவரே பலியாகியுள்ளார். மேலும் இதன்போது உ.சுதர்சினி (வயது 20) எனும் பெண் படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது...

யாழில் அனைத்து பாடசாலையிலுமுள்ள 13-19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயற்சி முகாம் ஒன்று யாழ்.மத்திய கல்லாரியில் எதிர்வரும் 28,29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. குறித்த பயிற்சி முகாமை நடாத்துவதற்கு என கொழும்பில் இருந்து கிரிக்கெட் பயிற்சியாளர்களுடன் இலங்கை சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் வருகை தரவுள்ளார். எனவே இந்த பயிற்சி முகாமிற்கு யாழிலுள்ள அனைத்து பாடசாலை...

நாட்டில் நிலவுகின்ற மிக மோசமான காலநிலையை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. புத்தளம் முதல் காங்கேசன்துறை ஊடாக பொத்துவில் வரை கரையோரபகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மலையகத்துக்கான ரயில் சேவைகள் முற்று முழுதாக இரத்து செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. அத்துடன், மட்டக்களப்புக்கான...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடனான சில கடிதங்கள் இராணுவத்தினால், இராணுவ சிப்பாய்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அனுப்பப்பட்டதாக அது குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், அதனை மறுத்துள்ள இராணுவத்தினர், அவை வருடாந்தம் வழமையாக அனுப்பப்படும் சாதாரண வாழ்த்துச் செய்திகளே என்று...

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான காலநிலை காரணமாக மழை வெள்ளத்திலும் மண்சரிவுகளிலும் சிக்கி இதுவரை குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். பதுளை மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவுகளில் சிக்கி, 19 பேர் உயிரிழந்துள்ளதாக பதுளை மாவட்ட பேரிடர் முகாமைத்துவ நிலையத்தின் துணை இயக்குநர் ஈ.எல்.எம். உதயகுமார கூறினார். இவர்களில் 11 பேரின் சடலங்கள்...

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இராணுவ வாகனம் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தினால் நுணாவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளுக்கான மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் எழுவோம் சுனாமிப்பேரலையின் கோர நிகழ்வுகள் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று காலை துர்க்காபுரத்தில் அமைந்துள்ள சிற்பாலய கலைக் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சுனாமி சிற்பத்தின் முன்பாக வழிபாடு இடம்பெற்று சுனாமிப் பேரலையில் இறந்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டு மறைந்த சிற்பக் கலைஞன் ஏ.வி.ஆனந்தனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் முன்னெப்போதுமில்லாத வகையில் அவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்களின் வாக்குகளை ஈட்டித்தரும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் தமிழ் ஊடகங்களில் ஆசிரியர்களுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஜனாதிபதி...

கிளிநொச்சி மாவட்ட வெளிக்கள பெண் அரச உத்தியோகத்தர்களுக்கு ஜம்தாயிரம் ரூபாவிற்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதில் உள்ள தாமதம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரின் கவனத்திற்கு குறித்த உத்தியோகத்தர்களினால் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து அரச வெளிக்கள பெண் உத்தியோகத்தர்களுக்கும் விரைவாக மோட்டார் சைக்கிள்களை வழங்கும் வகையில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர்...

தெல்லிப்பளை கிழக்கு J/228 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கொக்குவில் மற்றும் நந்தாவில் பகுதி மக்களும் நேற்றயதினம் (25) காலை ஒன்றுகூடி தங்களது அடிப்படை வசதிகள் தொடர்பில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். தெல்லிப்பளை கிழக்கு, வண்ணாமாதரை, நாமகல் வீதி விளானை உட்பட அப்பகுதி சார்ந்த கிராமங்களினது மக்கள் தங்களுக்கான போக்குவரத்து பாதைகள் புதிய...

ஜனாதிபதி தேர்தலின் தபால் வாக்களிப்பில் யாழ்.மாவட்டத்தில் 90 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்டச் செயலருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் தபால் மூலமான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (23) முதல் 250 வாக்குச் சாவடிகளில் 200 தேர்தல் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது....

எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி) அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் புதன்கிழமை (24) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில்...

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களிடம் புதன்கிழமை (24) விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அக்கட்சியின் மேலும் ஐந்து பேரை, எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ். பொலிஸாரின் அழைப்பின் பேரில், வடமாகாண...

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்றாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டதாரிகள் சங்கம், அரசுடன் இணைந்து செயற்படும். அதில் மாற்றமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் சங்கத் தலைவரும் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன், புதன்கிழமை (24) தெரிவித்தார். யாழ். விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே...

சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 2,500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்தினூடாக கோரிக்கைப் பத்திரமொன்றை அனுப்பி வைத்துள்ளார். போலி கையெழுத்துடனான ஒப்பந்தமொன்றைத் தயாரித்து தனக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டார் என சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கா மீது குற்றஞ்சாட்டியே அவர் இந்த நட்டஈட்டுத் தொகையைக் கோரியுள்ளார்....

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் திலகரத்ன டில்ஷான், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக நுகேகொடை, தெல்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது கூறினார். இவ்வாறானதொரு நிலையில், அணியின் மூத்த வீரர்களாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜனவர்தன ஆகியோருக்கும் ஜனாதிபதி தரப்பிலிருந்து அழைப்பு வந்துள்ள போதிலும் அவ்விருவரும் அதனை மறுத்ததாக வெளியான...

கிழக்கு உட்பட பல மாகாணங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 4 பேர் உயிரிழந்தள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பேரும் அம்பாறை மாவட்டத்தில் ஒருவரும் என 4 பேர் மரணமடைந்துள்ள அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நாட்டின் பல பகுதிகள்...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாழ்த்து தெரிவிக்குமாறு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், விரிவுரையாளர்களை கட்டாயப்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களுக்கும் குறித்த வாழ்த்துக் கடிதத்தில் கையொப்பம் இடுமாறு துணைவேந்தரால் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரச உத்தியோகத்தவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவது தொடர்பில் யாழ். மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

All posts loaded
No more posts