- Friday
- September 19th, 2025

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு 2015 ஜனவரி மாதம் 6ஆம் திகதி மாலை 6 மணி தொடக்கம் மறுஅறிவித்தல் வரை யாழ். நகரப்பகுதியில் குறிப்பிட்ட சில வீதிகள் மூடப்பட்டிருக்கும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.ரவிந்திர வைத்யலங்கார, திங்கட்கிழமை (05) தெரிவித்தார். காந்தி வீதி,...

யாழ். கோப்பாய் மத்தி பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவர் வலது கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேயிடத்தை சேர்ந்த ஏ.சந்திரகுமார் (வயது 38) என்பவரே படுகாயமடைந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த...

'பிரபாகரனை நான் 'மிஸ்டர் பிரபாகரன்' என்று சொன்னதாக எனக்கு எதிராக சேறு பூசுகிறார்கள். மஹிந்த ராஜபக்ஷவும் பிரபாகரனை 'மிஸ்டர் பிரபாகரன்' என்று கூறியிருக்கின்றார். அவரது உத்தியோகபூர்வ இணையதளத்திலும் அவ்வாறே காணப்படுகின்றது' என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய...

தேர்தல் வன்முறைகள் கட்டுமீறிப் போகுமிடங்களில் மீள் வாக்கெடுப்பு நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று திங்கட்கிழமை (05) தெரிவித்தார். நேற்று அவசரமாகக் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர், 'கடந்த இரண்டு நாட்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. இந்தப் போக்கை கண்டிப்பதுடன் இது மிகவும் மோசமான வன்முறையாகும்'...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற விதத்தில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அங்கஜன் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஐக்கிய மக்கள் சுதந்திரக்...

'எனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்கலுக்கு இடமில்லை. சமூக மற்றும் அரசியல் மீள்கட்டுமான நடவடிக்கைகளே எனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளன. எனது இந்த யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது' என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 'இந்த நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும்...

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளது எனவே நீதியானதொரு தேர்தலை நடாத்த சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளன. அந்தவகையில் யாழ்....

கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் மீதும் சிறுவர்களின் மாமன் மீதும் படைச்சிப்பாய் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் குறித்த இரு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த சிறுவர்களின் தயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நேற்றைய தினம் மாலை 3.30 மணியளவில்...

கடமைக்காகச் சென்ற தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணை செய்யச் சென்ற நபர் மீதே நேற்று முன்தினம் (04) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தரும்...

எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி,...

வட மாகாண மக்களை குழப்பும் வகையில் அரச தரப்பினால் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் வட மாகாண மக்களை அவதானமாக இருக்குமாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக அரச தரப்பினால் மக்களை குழப்பும் வகையில் துண்டு பிரசுரங்கள் மற்றும் மாதிரி வாக்குசீட்டுகள் என்பன விநியோகிக்கப்பட்டு...

இரத்தினபுரி, நிவித்திகலவில் எதிர்கட்சியினரின் தேர்தல் பிரசாரமேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மூவரும் இரத்தினபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும்,பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரி-ரணில் ஒப்பந்தம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க முன்வைத்த ஆவணம் போலியானது என்று அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடியாக நிராகரித்துள்ளார். தனி ஈழம் வழங்குவது உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக பொது வேட்பாளர் மைத்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டியது. ஐக்கிய தேசியக் கட்சியின்...

எமது தேசத்தைச் சுடுகாடாக்கியவர்களுக்கு பதிலடி கொடுப்போம்”, “அன்னப் பறவைக்கு வாக்களிப்போம்” என்று குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் இன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோன்று மஹிந்தவுக்கு வாக்களிக்க வேண்டாம் என குறிப்பிட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, போன்ற இடங்களிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்.மட்டுவில் பகுதியில் வீதியில் நின்றிருந்த ஒருவர், அவ்வீதியால் சென்றவரை மறித்து தொண்டையில் கடித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகலின் போது இடம்பெற்றுள்ளதாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். மட்டுவில் வடக்கைச் சேர்ந்த கார்த்திகேசு மகாதேவன் (வயது 55) என்பவரே தொண்டையில் கடி வாங்கியுள்ளார். வீதியால் சென்ற இவரை மறித்த ஒருவர், இவரது தொண்டையில் கடித்துள்ளார். கடியுண்டவரை காப்பாற்றச்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள் இருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கட்சி தாவியுள்ளனர். உறுப்பினர்களான ஜெ.ஜெயராஜா, எம்.மயூரன் ஆகியோரே இவ்வாறு கட்சி தாவியுள்ளனர்.

'நாங்கள் எவருடேனும் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை. கடந்த காலங்களில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாரிய மோசடிகளைச் செய்தது. அவை அனைத்தையும் நாம் பொறுத்துக்கொண்டோம். எமது வெற்றி உறுதி. நாம் எமது விஞ்ஞாபனத்தை முன்வைத்த பின்னரே பலர் எம்முடன் இணைந்துகொண்டனர். நாம் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்போம்' என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்....

மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் விதத்தில் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான குறித்த நபரே இன்று காலை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இவர் எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களின் தனக்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் கடுமையான மரண அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படவுள்ளது என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பக்கமூன பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய வேட்பாளர், 'எங்களை பிணங்களாக்குவதன் மூலம்,...

நாம் அரசியல்வாதிகள் என்பதற்கு அப்பால் அரசியல் போராளிகளாக இருந்து கொண்டு மக்களுக்கு கௌரவமான ஒளிமயமான வாழ்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்ற வகையில் திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்தி வருகின்றோம். உரிமைக்கு குரலும் உறவுக்குக் கரமும் கொடுக்கும் எமது இணக்க அரசியல் ஊடாக, மக்களின் தேவைகள் இனம்காணப்பட்டு அவற்றுக்கு உரிய முறையில் தீர்வுகாணும் அதேவேளை, நீடித்த நிலையான அரசியல்...

All posts loaded
No more posts