கிணற்றுக்குள் வீழ்ந்த பேரனை காப்பாற்றச் சென்ற மூதாட்டியொருவர் உயிரிழந்த சம்பவம் குடத்தனை கிழக்கு பகுதியில் திங்கட்கிழமை (19) மதியம் இடம்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சிதம்பரநாதன் தங்கம்மா (வயது 65) என்ற மூதாட்டி உயிரிழந்ததுடன், கலைச்செல்வன் கலைமயூரன் (வயது 6) என்ற சிறுவன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிணற்றடியில் நின்றிருந்த பேரன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்ததை அவதானித்த, மூதாட்டி ஓடிச் சென்று தானும் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
இருவரும் கிணற்றுக்குள் குதிப்பதை அவதானித்த அயலவர்கள் இருவரையும் மீட்டபோது, மூதாட்டி இறந்துவிட்டார். இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.