ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் சபை உறுப்பினர் சரவணபவானந்தன் சிவகுமார் என்பவரது மோட்டார் சைக்கிள் விசமிகளால் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு தீவைக்கப்பட்டதாக மருதங்கேணி உப-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் முன்பக்கத்தில் விடப்பட்டிருந்த 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளே இவ்வாறு எரிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி உப-பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலும் முறையிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உறுப்பினர் தெரிவித்தார்.