Ad Widget

உள்ளூராட்சி மன்ற நியமனங்களில் முறைகேடு

உள்ளுராட்சி மன்ற நியமனங்களில் இடம்பெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் வடமாகாண சபையில் தெரிவித்தார்.

sugirthan-tna

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) நடைபெற்றபோதே, சுகிர்தன் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

அண்மையில் வழங்கப்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் ஆயுள்வேத உதவியாளர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளது. அங்கு இருந்த வெற்றிடத்துக்கு போட்டி பரீட்சை நடத்தப்பட்டு, 78 புள்ளி மற்றும் 77 புள்ளி பெற்ற இருவர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

நேர்முகப்பரீட்சையில் 77 புள்ளிகள் பெற்றவர் நியமிக்கப்பட்டு, 78 புள்ளிகள் பெற்றவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் பெயரைப் பயன்படுத்தி இந்த முறைகேடான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆளுநரைக் கேட்டபோது அவர் தனக்கு இதுபற்றி தெரியாது எனக்கூறியுள்ளார் என சுகிர்தன் தெரிவித்தார்.

Related Posts