- Saturday
- July 5th, 2025

வட மாகாண ஆளுநராக இராணுவத்தை சாராத ஒரு சிவிலியன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலர் பலிஹக்கார ஆளுநராக நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இணையதளத்தின் மூலம் அறிவித்துள்ளார். அங்கு ஆளுநராக இருக்கும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பலிஹக்கார முன்னர் ஜெனீவாவிலுள்ள...

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிம்மதியான வாழ்வு மலரும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தனக்கு தொடர்ந்தும் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- காணாமல்போனோரின் உறவினர்கள் பாப்பரசரை சந்திப்பதற்கும், பாப்பரசரின் ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காகவும் மடு திருத்தலத்திற்கு சென்றிருந்தனர். இவர்களுடன் காணாமல்போனோரின் உறவினர்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அயோமா ராஜபக்ஷ ஆகியோரை கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்தில் நேற்று மாலை சந்தித்ததாக, பாப்பரசரின் பேச்சாளர் அருட்தந்தை பெட்ரிக்கோ லம்பேட் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன், பாப்பரசர் சுருக்கமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் அவர்...

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களுக்கிடையில் நேற்று புதன்கிழமை (14) இரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி விலகிவிடக்கூடாது என்று, தேசிய சுதந்திர...

இலங்கை வந்துள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தமிழ் சிங்கள மொழிகளைப் பேசும் சமூகங்களை உள்ளடக்கிய இலங்கை மக்கள் இழந்துவிட்ட ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற கடின முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று மடுத்திருப்பதியில் இடம்பெற்ற ஆராதனையின்போது தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள நானூறு வருடங்கள் பழைமை வாய்ந்த கத்தோலிக்கத் திருத்தலமாகிய மடுத்திருப்பதிக்கு முதற் தடவையாக...

உங்களுக்காக நான் பிரார்த்திகின்றேன்.எனக்காக இலங்கை வாழ்மக்களாகிய நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்தார். கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை ஆராதனை இடம்பெற்றது. இதில் நாடளாவிய ரீதியில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இங்கு மறையுரை ஆற்றிய பரிசுத்த பாப்பரசர், மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும்...

மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாகர்கோவில் பிரதேசத்தில் குறித்த நிறுவனம் தொடர்ந்தும் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதால் கடல் நீர் கிராமங்களுக்குள் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்துமாறு கோரி 16 ஆம் திகதி காலை நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள...

புனித பாப்பரசர் அருட்தந்தை பிரான்சிஸின் உலங்கு வானூர்தி மூலம் வடக்கின் மடு தேவாலையத்திற்கு தற்போது வருகைதந்துள்ள நிலையில் விசேட ஆராதனைகள் ஆரம்பமாகியுள்ளது. பாப்பரசரின் ஆசீர்வாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், சி,வி,விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்கள், யாழ்.மாவட்டத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர், மற்றும் ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களும் கூடியுள்ளனர். இதேவேளை...

பாப்பரசர் பிரான்ஸிஸின் இலங்கை வருகையையொட்டி யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 4 சிறைக்கைதிகள் இன்று புதன்கிழமை (14) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வயோதிப பெண் ஒருவர் உட்பட 3 ஆண்களும் இவ்வாறு விடுதலை செயயப்பட்டுள்ளனர்.

மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்கள் தலைவர்களாக வரவேண்டும். எங்கள் கோரிக்கைகள் 100 நாள் வேலைத் திட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா, வைரவ புளியங்குளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளராக பாலித பெல்பொல நியமிக்கப்பட்டுள்ளார் இவருக்கான நியமனக் கடிதத்தை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வழங்கினார். இதேவேளை, ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளராக சமிந்த சிறிமல்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த பருவ மழைக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் பரம்பல் தீவிரமடைந்துள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் புதன்கிழமை (14) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த வருடத்தில் (2014) யாழ். மாவட்டத்தில்...

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு தொலைபேசி மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மாலை மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தங்காலை பொலிஸ் நிலையத்தில் அவர் முறைபாடொன்றைச் செய்துள்ளார்.

நாம் அழுத கண்ணீரும் சிந்திய இரத்தமும் அதற்குக் காரணமான இன ஒடுக்குமுறை அரசை இன்று அதிகாரபீடத்தில் இருந்து தூக்கி வீசியிருக்கிறது. மாற்றத்துக்கான வாக்களிப்புடன் புதிய ஆட்சி சிம்மாசனம் ஏறியுள்ளது. அந்த மாற்றத்தை நோக்கிய பயணத்துக்குத் தமிழ் மக்களாகிய நாமும் கரங்கொடுத்தோம். அந்த வகையில் எமது விடிவுக்கான கதவுகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை பொங்கும் நாளாகத் தைப்பொங்கல்...

இளமாணி ,முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் இந்தியாவில் தொடர்வதற்காக, கலாசார உறவுகளுக்கான இந்தியப்பேரவையின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கையைச்சேர்ந்த 180 பேருக்கு உயர்கல்வி புலமைபரிசில்களை வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது. மருத்துவம் தவிர்ந்த ஏனைய துறைகளில் உயர்கல்வியை தொடர்வதற்காக இவை வழங்கப்படுகின்றன.இலங்கை அரசின் உயர் கல்வி அமைச்சின் ஊடாகவே பயனாளர் தெரிவுகள் இடம்பெறும். இலங்கை அரசின்...

இலங்கைக்கு இரு நாட்கள் திருயாத்திரை மேற்கொண்டு நேற்று கொழும்பு வந்தடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மன்னார் மடுத் திருத்தலத்திற்கு வருகை தருவார். பாப்பரசரிடம் ஆசி பெற இலட்சக்கணக்கான மக்கள் மடுத் திருத்தலத்தில் காத்திருக்கின்றனர். இதேவேளை மடுப் பிரதேசத்தில் 3 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து விமானப் படையின்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் இடைக்கால வரவு - செலவுத் திட்டம் ஜனவரி 29 இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அவர் நிதி அமைச்சக வளாகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போது, புதிய அரசாங்கத்தின் பிரதான நோக்கம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையுடன்...

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரிகளிலுள்ள கிணறுகளிலும் எண்ணெய் கசிவு இருப்பதாக சுகாதார பரிசோதகர்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, மாணவர்களுக்கான குடிநீருக்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இரு கல்லூரிகளின் அதிபர்களும் தெரிவித்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அதிபர் க.ரட்ணகுமார், 'கடந்த 6ஆம் திகதி சுகாதார பரிசோதகர்களால் எமது பாடசாலை...

All posts loaded
No more posts