Ad Widget

கல்வி ராஜாங்க அமைச்சர் யாழ். வருகை

கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் நேற்று வட்டு இந்து கல்லூரிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

vaddu-hindu

வட்டுகோட்டை இந்து கல்லூரியின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று கல்வி ராஜாங்க அமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் வருகைதந்திருந்தனர்.

புதிய அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்று 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் நேற்றைய தினம் அமைச்சர் பாடசாலைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஆசிரியர்கள், மாணவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை முன்னைய மகிந்த ராஜபக்ச அரசு ஆட்சியில் இருந்த போது வடக்கு, கிழக்கில் இடம்பெறும் போது நிகழ்வுகளுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அழைப்பதில் அச்சமான ஒரு சூழ்நிலை காணப்பட்டுவந்தது.

அனால் இன்று புதிய அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் விருந்தினராக அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Posts