Ad Widget

நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகம் திறந்து வைப்பு

நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகம் மற்றும் கலாசார மண்டபம் ஆகியன தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, யாழ்.இந்திய துணைதூதரக அதிகாரி எஸ்.தட்சணாமூர்த்தி ஆகியோரால் வியாழக்கிழமை (05) திறந்து வைக்கப்பட்டது.

புறநெகும திட்டத்தின் கீழ் 52 மில்லியன் ரூபாய் செலவில் திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட 3 மாடிகளை கொண்ட கட்டடமே திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டட தொகுதியில், கீழ் தளத்தில் பிரதேச சபையின் தலைமை அலுவலகமும் இரண்டாம் தளத்தில் கலாச்சார மண்டபமும் மூன்றாம் தளத்தில் சிறுவர் உள்ளக விளையாட்டு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.

சிறுவர் உள்ளக விளையாட்டு அரங்கின் பணிகள் பூர்த்தியாகாததால், அது தவிர்ந்த ஏனைய இரு தளங்களும் திறந்து வைக்கப்பட்டது.

தலைமை அலுவலகம் அமைந்துள்ள கீழ் தளத்தை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் கலாச்சார மண்டபத்தின் தளத்தை இந்திய துணைதூதரக அதிகாரி எஸ்.தட்சணாமூர்த்தியும் திறந்து வைத்தனர்.

இந்த கட்டடத்துக்கான நிதி புறநெகும திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், நல்லூர் பிரதேச சபையின் 7 வீத பங்களிப்பும் அதில் உள்ளதாக தவிசாளர் பா.வசந்தகுமார் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈஸ்வரபாதம் சரவணபவன், சிவஞானம் சிறிதரன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

Related Posts