- Saturday
- July 5th, 2025

´திவிநெகும´ வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 2015.01.06ம் திகதி 1,456,980,000 ரூபா பணம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை மீளப் பெறுவது குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கணக்காய்வாளர் நாயகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் சாமர மத்துமகலுகே வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இத்தகவல் வௌியிடப்பட்டுள்ளது. திவிநெகும...

காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தர வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா பொது விளையாட்டு மைதானத்தில் கூடிய உறவுகள் அங்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடலை நடத்தினர். தொடர்ந்து பாப்பரசரைத் தரிசித்து தமது நிலைமையை எடுத்து விளக்குவதற்காக உறவுகள் மடு நோக்கிப் பயணமாகினர். காணாமல்போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று எந்தப் பதிலும் இல்லாது, அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா...

ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து விரிவான விசாரணையை நடத்துமாறு குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனங்கள் சிலவற்றை வெளியாட்கள் பயன்படுத்திவருகின்றமை குறித்து வெளியான தகவல்களை அடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியுள்ளார். இவ்வாறு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தையும் உடனடியாக மீளப்பெறுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தினர் என்று குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு எதிராக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்...

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இனந்தெரியாத நபர்கள் செவ்வாய்க்கிழமை (13) மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய், சுதுமலையைச் சேர்ந்த மகாராசா துஷாந்தன் (வயது 20), ஸ்ரீகரன் ஸ்ரீசங்கர் (வயது 24) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டு...

புனித பாப்பரசர் பிரான்சிஸின் வருகையையொட்டி நாளை புதன்கிழமை(14) பொது மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்த விடுமுறையை தனியார் ஊழியர்களுக்கும் வழங்குமாறு தொழில் ஆணையாளர் ஹேரத் யாப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் ஜெயரட்ணம் அமலன் கொலை வழக்கு விசாரணை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் படி மேலதிக விசாரணைக்காக நேற்று யாழ். மேல்நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. பொன் அணிகளின் போர் கிரிக்கெட் போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் ஜெயரட்ணம் அமலன் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார். இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இவர் துடுப்பாட்ட...

காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பதவியை ஏற்றதாலேயே இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைய நேரிட்டது என்று அவரது ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவிடம் 2 ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலை நடத்துங்கள் என்று கூறியதுடன் தேர்தல் நாளை குறித்து கொடுத்தும் மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கான நேரத்தை தேர்ந்தெடுத்தது,...

வடமாகாணத்தில் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் கடந்த 2014 வருடத்தில் அதிகரித்துள்ளதாக வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் ரீ.விஸ்பரூபன் இன்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் இவ்வாறான சமூக, கலாச்சார சீரழிவுகள் இடம்பெற்று வருகின்றன. கடவுள் நம்பிக்கை இல்லாது இளைஞர்கள் தவறான வழியில் செல்வதனால் அவர்களுக்குரிய கட்டுப்பாடு இல்லாமல் இருக்கின்றது....

ஜனாதிபதித் தேர்தலின் போது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சூழ்ச்சி முயற்சிகளில் ஈடுபட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அவதானித்த பின் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதியானதை அடுத்து அதிகாரத்தை அவரிடம் ஒப்படைக்க முன்வந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தினத்தன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

இலங்கையை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் மத மற்றும் அரசியல் நல்லிணக்கம் உள்ள நாடாக காண்பதே தனது அபிப்பிராயம் பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த பாப்பரசர், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில்...

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தால் இளைஞர், யுவதிகளுக்கான விருந்தினர் விடுதி இலவச பயிற்சி நெறிகள் காரைநகரில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் நிர்வாக தலைவர் பி.யோ.சுந்தரேசன் தெரிவித்தார். யாழிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக்கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் வளர்ச்சியானது...

தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் தலைமையில் திங்கட்கிழமை (12) நடைபெற்றது. அளவெட்டி, மல்லாகம், கட்டுவன், இளவாலை, மல்லாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் இதில் கலந்துகொண்டனர். தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி...

நீண்ட காலமாக குறிப்பிட்ட குப்பைகள் மாத்திரம் ஏற்றிவிட்டு ஏனையவற்றை வீதியிலேயே விட்டுவிட்டு செல்லும் யாழ்.மாநகர சபையின் செயற்பாட்டினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக யாழ்.கச்சேரி, சுவாட்ஸ் லேன் வீதியிலுள்ள குறிப்பிட்ட குப்பைகளை மாத்திரம் அகற்றிவிட்டு வாழைத் தண்டுகள், மரக்குற்றிகள் போன்றவற்றை ஏற்றுவதற்காக மக்களிடம் ஒரு தொகைப் பணத்தை கேட்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்....

'அமைச்சர்கள் நாட்டுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும் மக்கள் சேவையின் போது குற்றச்செயல்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபடுவர் மீது அவர் அமைச்சராக இருந்தாலும் அவருக்கு எதிராக பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் உறுதியான கொள்கையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள் மக்கள் நம்பிக்கையை வெல்லக்கூடியவர்களாகவும், மக்களுக்கு முன்மாதிரியாக செயற்படக்கூடியவர்களாகவும்...

யாழில் எட்டு லட்சம் ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருவர் 35 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, யாழ். ஊரெழுவை சேர்ந்த ஒருவருக்கு நேற்று திங்கள்கிழமை காலை தொலைபேசி அழைபொன்று வந்துள்ளது. தாம் குறித்த ஒரு தொலைபேசி நிறுவனம் ஒன்றில் இருந்து கதைப்பதாகவும் எமது நிறுவனத்தால் நீங்கள் அதிஸ்டசாலியாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் எனவும்...

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை சற்று நேரத்திற்கு முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். ஏயார் இத்தாலியா விமானத்தின் மூலம் பரிசுத்த பாப்பரசர் இலங்கை மண்ணை வந்தடைந்தார். பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பாரியார், கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன்...

யாழ்ப்பாணம், கற்கோவளம், தபால்பெட்டி சந்தியைச் சேர்ந்த 30 வயதான தாயொருவரையும் அவரது நான்கு வயது மகளையும் காணவில்லை என அவர்களின் உறவினர்கள், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (12) முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். பிரதாப் ஜெனிஸ்ரலா விஜயகுமார் மற்றும் அவரது மகள் பிரதாப் சரணியா ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என்று பொலிஸ்...

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 87 நிறுவனங்கள் கடந்த வருடம்; (2014) பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட தொழில் திணைக்கள பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எமது திணைக்கள அதிகாரிகள் கடந்த 2014ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் சென்று, சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு...

கிளிநொச்சி, கரடிப்போக்கு சந்தியில் திங்கட்கிழமை (12) மதியம் இடம்பெற்ற விபத்தின் போது, வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கரடிப்போக்குச் சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு, வீதிக்கு வரும்போது, கன்ரர் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது....

All posts loaded
No more posts