Ad Widget

ஓமந்தை சோதனைச் சாவடி அகற்றப்படவில்லை – இராணுவம்

ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மை இல்லை என பதில் இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

army-K.J-Jayaweera

முன்னரைப் போலவே ஓமந்தை இராணுவ முகாம் அவ்விடத்தில் இருக்கும். ஆனால் யுத்த காலத்தை போன்று அல்லாமல் அதனை சோதனை நடவடிக்கைகளில் தளர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஓமந்தை ஊடாக பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவே சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts