- Thursday
- July 3rd, 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இராமநாதன் வீதியிலுள்ள புகையிரதக் கடவை பாதுகாப்பாற்ற நிலையில் காணப்படுவதால் ஆபத்து மிகுந்ததாகக் காணப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆனந்தகுமாரசாமி பெண்கள் விடுதிக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியை ஊடறுத்துச் செல்லும், புகையிரதப் பாதையில் வீதிக்கடவை இல்லை. அத்துடன் புகையிரதம் வரும் வேளையில் ஒலி எழுப்பும் கம்பமும் அவ்விடத்தில் பொருத்தப்படவில்லை. யாழ். பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மாணவர்கள்...

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் சமய முறைப்படி திருமணத்தில் இணைந்துகொண்டவர்களுக்கான சட்ட ரீதியான திருமணப்பதிவு வெள்ளிக்கிழமை (23) நடைபெற்றது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இராசேந்திரம் குருபரன் தலைமையில் இத்திருமணப்பதிவு நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட சட்ட உதவி ஆணைக்குழுவின் ஒழுங்குப்படுத்தலில் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. திருமணப் பதிவுகளுக்கு அழைக்கப்பட்ட 19 சோடிகளில் கலந்து கொண்ட 12 சோடிகளுக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் 5 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில் குழந்தைகளுக்கான பால்மா உட்பட குழந்தைகளுக்கான உணவுகளின் விலைகள் குறைக்கப்படும் என்று பொருளாதார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இதேவேளை, எரிபொருட்களின் விலை மேலும் குறைக்கப்படவுள்ளதாகவும் எதிர்வரும் 29ஆம் திகதி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு –...

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் களைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரச நிர்வாகம் மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அந்த தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போ ஆட்சிக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு வருடங்களுக்கு புதிய அரசியலமைப்பு திருத்தம்...

மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின்...

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உட்பட 6 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க கொழும்பு தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கே வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுக மாகாண சிரேஷ்ட...

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடந்த காலங்களில் வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமித்திருந்த 29 பேரை அந்தப் பதவிகளிலிருந்து திருப்பியழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. இதேவேளை, இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையை இலங்கை அரசாங்கம் இன்னும் முறையாக மீளத் தொடங்காதுள்ள சூழ்நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு சட்டவிரோதமாக இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக புதிய துணை...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பங்காளிகளாக இருக்கும் கட்சிகள் வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிடத் திட்டமிட்டு வருகின்றன. இந்தக் கூட்டணி பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயன்படுத்திய வெற்றிலை சின்னத்தையே தமது சின்னமாகப் பயன்படுத்தவும் விரும்புகின்றன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர...

வடமராட்சி கிழக்கு, உடுத்துறை கடற்பரப்பில் கரையொதுங்கிய மர்மப்பொருளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்து. இன்று காலை கடற்கரையில் மஞ்சள் நிறத்திலான மர்ம பொருள் மிதந்து கரையொதுங்கியது. இதனை அவதானித்த பலர் பரபரப்பாகினர். இதனையடுத்த அப்பகுதியில் பொதுமக்கள் கூடி அதனை வேடிக்கை பார்ததனர். அத்துடன் இதுகுறித்து பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்குவந்த பொலிஸார் அந்தப் பொருளை பார்வையிட்டு...

சுன்னாகம் பகுதியில் கழிவு எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு குடிநீர் தருவதால் மட்டும் பிரச்சினையை தீர்த்துவிட முடியாது. குடிநீரை விட உணவுச்சங்கிலி மூலம் தான் பாதிப்புக்கள் ஏற்பட வாய்புக்கள் அதிகம் உள்ளது என யாழ். மருத்துவ பீட பீடாதிபதி ச.பாலகுமரன், சனிக்கிழமை (24) தெரிவித்தார். சுன்னாகம் சிவன் கோவில் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை (24) மதியம் சுற்றுச்சூழல்...

நொர்தன் பவர் நிறுவனத்தை மூடுமாறு மின் சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உத்தரவு இடவில்லை என சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தினர் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் சிவன் கோவில் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை (24) மதியம் சுற்றுச்சூழல் அமையத்தின் ஏற்பாட்டில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நொர்தன் பவர் நிறுவனத்தை மூடும்படி தமக்கு எந்த அறிவித்தலும்...

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடல் கொழும்பிலுள்ள அமைச்சர் சுவாமிநாதனின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது , வலி.வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காணிளை விடுவித்து மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் பிரதானமாக கலந்துரையாடியுள்ளனர். எனவே...

விளையாடிக் கொண்டிருந்தவேளை இராணுவ முகாமிற்குள் சென்ற பந்தை எடுக்கச் சென்றவரை இராணுவத்தினர் கடுமையாக தாக்கியதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வல்வெட்டித்துறை எள்ளங்குளம் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளை இராணுவ முகாமுக்குள் பந்து சென்றுவிட்டது. அதனை எடுப்பதற்கு சென்ற...

நொர்தன் பவர் நிறுவனத்தை மூடுதல் தொடர்பில் நீதிமன்றத்தில் உத்தரவு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்காலிகமான கைவிடப்படுவதாக பருத்தித்துறை சுகாதார வைத்தியதிகாரி பணிமனை வைத்தியர் ஜி.செந்தூரன் தெரிவித்தார். சுன்னாகம் சிவன் கோவில் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர்...

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் தன்னைக் கடத்திச் செல்ல முற்பட்டதாக நெல்லியடியைச் சேர்ந்த பெண்ணொருவர்(வயது 40) நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (22) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நெல்லிடிக்கு செல்வதற்காக, ஆவரங்கால் சந்தியில் பஸ்ஸூக்காக காத்திருந்தபோது, குறித்த பெண்ணை, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் நெல்லியடியில் இறக்கிவிடுவதாகக்கூறி ஏற்றியுள்ளார். நெல்லியடிப்...

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் முகப்பு பகுதியில் மீண்டும் இராணுவக் குடியிருப்பு என அடையாளப்படுத்தும் பெயர் பலகையால் வலி,வடக்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த பெயர் பலகை முன்னரும் ஒருதடவை அமைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து சிறிது காலம் அகற்றப்பட்டிருந்த பெயர்ப் பலகை தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் வாயிலில் வளைவு...

மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று தனது கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்கு சென்று பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு நலன் விசாரித்தார். இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஸ்ரீரங்கா, முன்னாள் சிறைச்சாலை புனர்வாழ்வு...

"ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க இராணுவம் மூலம்ஆட்சியைத் தக்க வைக்க மஹிந்த ராஜபக்ஷ சதித் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டை என்னால் முழுமையாக நிராகரிக்க முடியாது. ஏனெனில், கொழும்பில் முக்கிய பகுதிகளில் இராணுவ குவிப்பும் ஒரு சில பகுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர் எனவும் நான் அறிந்தேன். இது தொடர்பாக பொதுமக்கள் பலர் எனக்குத்...

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மஹேந்திரன், நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார். நேற்று மாலை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வ கடிதத்தினை அன்ஜுன மஹேந்திரனிடம் ஜனாதிபதி கையளித்தார்.

All posts loaded
No more posts