- Friday
- July 4th, 2025

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாடு செய்ய இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பொதுமக்களுடன் திங்கட்கிழமை (26) சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். ஆலயத்துக்கு சென்ற விஜயகலா, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டார். கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன்...

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வருகை தந்த உயர்மட்டக் குழுவினர், சுன்னாகம் மின்சார நிலையத்துக்கு திங்கட்கிழமை (26) விஜயம் செய்து எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். சுன்னாகத்தில் அமைந்துள்ள நொர்தன் பவர் நிறுவனத்தால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெயால், சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு...

எனக்கும் என் தந்தைக்கும் எந்தளவுக்கு சேறு பூசவேண்டுமோ அந்தளவுக்கு சேறு பூசவும் என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எங்களுடைய அம்மாவையோ, குடும்பத்தையோ அரசியல் சேறு பூசுவதற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். என்னுடைய தாய், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கத்தை களவெடுக்கவில்லை. முன்னாள் பிரதிபொலிஸ் மா...

இலங்கை மின்சார சபையின் நொதர்ன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கை ஆராய்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் நொதர்ன் பவர் நிறுவனத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதன் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைப்பதுடன் மறு அறிவித்தல் வரும்வரை...

இந்த வருட முடிவுக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உரிய தீர்வு காணப்படும். இவ்வாறு தம்மைச் சந்தித்த மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பிடம் உறுதிபடத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்படி உறுதிமொழியை மன்னார்...

உயர் தரக் கல்வியைத் தொடர்வதற்கு க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் கணித பாடம் கட்டாயமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயர்தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளவர்களின் விகிதாசாரத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு...

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றும் 127 பேரையும் சுகாதார உதவியாளர்களாக இணைத்துக் கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் உள்நாட்டு மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன நடவடிக்கை எடுத்துள்ளார். போதனா வைத்தியசாலையில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றிவரும் 127 பேரையும் நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தி அவர்களை சுகாதார உதவியாளர்களாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை வருவார் என இந்தியத் தூதரகத்தின் தகவல் ஊடகப்பிரிவுக்குப் பொறுப்பான முதற் செயலாளர் ஈஷா ஸ்ரீநிவட்சவா தெரிவித்துள்ளார். திகதிகளை இறுதிசெய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. 1987ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி விஜயம் மேற்கொண்ட பின்னர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக இந்தியப் பிரதமர்...

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.01.2015) வவுனியா நகரசபை மண்டபத்தில் கோலாகலமாக நிகழ்ந்தேறியது. வடக்கின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தையொட்டி உழவர் பெருவிழாவை நடாத்தி வருகிறது. கடந்தவருடம் இவ்விழா கிளிநொச்சியில் இடம்பெற்றதையடுத்து இம்முறை வவுனியாவில்...

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் வாள்கள், மற்றும் கைக்கோடாரிகளுடன் இளைஞர் குழுவொன்று, ஞாயிற்றுக்கிழமை (25) இரவு நடமாடியுள்ளனர். சந்தியிலுள்ள மதுபான நிலையத்துக்கு முன்பாக இந்த இளைஞர் குழு நடமாடியதையடுத்து, அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தை சேர்ந்த வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டுச் சென்றனர். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவ்விடத்துக்கு கோப்பாய் பொலிஸார் வந்தவேளையில்,...

யாழ் சுழிபுரம், காட்டுப்புலம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை (26) உத்தரவிட்டார். கடந்த 20ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகளால், ம.சுஜந்தன் (வயது 28) என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டதுடன், அவரது...

உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா திங்கட்கிழமை (26) தெரிவித்தார். மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்கின்றதா? என்று அவரிடம் வினாவியபோதே, அவரிடம் இவ்வாறு தெரிவித்தார்....

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி ஷாமலி பெரேரா இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். நாட்டின் திறைசேரியில் இருந்த தங்கத்தை விற்பனை செய்ய முயற்சித்தமை தொடர்பில் அவர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டை செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெளியேறினேன்" - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பொலநறுவையில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்ட ஜனாதிபதி, தேர்தலில் தோற்றிருந்தால் தான் ஆறடி நிலத்திற்குள் புதையுண்டிருப்பார் என்றும் கூறினார். அக்கூட்டத்தில் மேலும்...

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்ந்தோருக்கும் பொதுமக்களுக்குமிடையே இன்று காலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது மண் அகழ்வில் ஈடுபட்டவர்களால் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்றும் தெரியவருகிறது. சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது என்றும், அங்குவந்த பொலிஸார் கை கட்டி வேடிக்கையே பார்த்தனர் என்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் அரச பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கேர்ணல் தரப் பட்டங்களையும் உடனடியாக இரத்துச்செய்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொண்டபின் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இவ் இராணுவ தலைமைத்துவ பயிற்சி நடவடிக்கைகளை கல்வித் துறைகள், தொழிற் சங்கங்கள்...

இந்தியாவின் 66 ஆவது குடியரசுதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துதரகத்தில் இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இந்தியாவின் யாழ்ப்பாணத்திற்கான உயர்ஸ்தானிகர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது இதில் இந்தியாவின் தேசியக்கொடியை யாழ். இந்தியத் தூதரகத்தின் தூதுவர் நடராஜா ஏற்றிவைத்தார். தொடர்ந்து இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் இந்தியாவின் குடியரசுதினத்தை...

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 447 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் இந்த நோய்த் தாக்கத்திற்கு இவ் வருடம் 3199 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு நோய் அதிகமாக பரவியுள்ளது. கொழும்பில் 870 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

வடமராட்சி கிழக்குப் பகுதியில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கருத்துக்கள் தொடர்பிலான அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன், ஞாயிற்றுக்கிழமை (25) கூறினார். வடமராட்சி கிழக்குப் பிரதேசங்களான, அம்பன், குடத்தனை, நாகர் கோவில் ஆகிய பகுதிகளிலுள்ள மணல்...

மீள்குடியேற்ற மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் விரைவில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம், மக்கள் மீள்குடியேறவேண்டிய பகுதிகள் மற்றும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் ஆகியோரைப் பார்வையிடுவதற்காக அவர்...

All posts loaded
No more posts