- Wednesday
- July 2nd, 2025

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க உயர்நீதிமன்ற வளாகத்துக்கு சற்றுமுன்னர் வருகைதந்தார். அவரை, சட்டத்தரணிகள் பூச்செண்டுகொடுத்து வரவேற்றனர். தற்போதய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் இடம்பெற்ற நிலையில் சிராணி பண்டாரநாயக்க சற்று முன்னர் உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்துளளார். இதேவேளை...

உரும்பிராய் சந்திப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றில் கழிவு எண்ணெய் நீரில் மிதப் பது வீட்டு உரிமையாளரால் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. உரும்பிராய் சந்திக்கு அண்மையில் மேற்குப் பக்கமாக 100 மீற்றர் தொலைவி லுள்ள வீட்டுக்கிணறு ஒன்றிலிருந்தே நீரில் கழிவு எண்ணெய் மிதப்பது அவதானிக்கப் பட்டுள்ளது. உரும்பிராயைச் சேர்ந்த பாலவண்ணன் என்பவரது வீட்டுக்கிணற்றிலிருந்தே இவ்வாறு கழிவு...

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள், நாடு திரும்புவது குறித்த பேச்சு இருநாட்டு பிரிதிநிதிகளுக்குமிடையில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியா வந்த சமயம் இது குறித்து பேசப்பட்டதென்றும் அவர் தெரிவித்தார். அகதிகளுக்கான ஐ.நா. மன்றம், ஐரோப்பிய...

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்கஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு, இன்னும் 1,425 இலட்சம் ரூபாய் வழங்கவேண்டியுள்ளது என உள்ளக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை...

வீட்டுத்திட்டம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுவதாக கோரி உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட J/208 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று காலை மேற்கொண்டுள்ளனர். குறித்த கவனயீர்ப்புப் போராட்டமானது உடுவில் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றதுடன் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினையும் பிரதேச மக்கள் வழங்கியுள்ளனர்.

இலங்கை இராணுவமும் அதனுடன் சேர்ந்த இராணுவ அனுசரணைச் சக்திகளும் நெடுந்தீவை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் யாழ்ப்பாணத்தின் பிற பிரதேசங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நெடுந்தீவு மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு,...

வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜனின் தந்தை இராமநாதன், அவரது உதவியாளர் அன்பழகன் உள்ளிட்ட 9 பேருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பித்து யாழ். நீதவான் பொ.சிவகுமார் செவ்வாய்க்கிழமை (27) உத்தரவிட்டார். அடக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மீது 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதியன்று தாக்குதல் மேற்கொண்டார் என்று குற்றச்சாட்டிலேயே...

நெடுந்தீவு மாவிலித்துறை பகுதியில் கடற்படையினர் முகாம் அமைப்பதற்காக வீதியை ஆக்கிரமித்துள்ளதாக நெடுந்தீவு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நெடுந்தீவு பிரதேச மக்களை சந்திப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண அமைச்சர்களான த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் மற்றும் உறுப்பினர்களான இ.ஆனோல்ட், பா.கஜதீபன், அனந்தி சசிதரன், அ.பரஞ்சோதி, விந்தன் கனகரத்தினம் கே.சயந்தன்...

பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை வருகிறார். அவர் இந்தப் பயணத்தின்போது யாழ்ப்பாணத்துக்கும் சென்று தற்போதுள்ள நிலை குறித்து ஆராய்வார் என்று கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் இவரது வருகை அமைந்துள்ளது. இலங்கைவரும் அமைச்சர் இங்கு, அரச தரப்பை சந்தித்து பல்வேறு...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்த பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவுகள் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது. தெல்லிப்பழை, நாவற்குழி, சண்டிலிப்பாய், மயிலிட்டி, வரணி, கெருடாவில், கோண்டாவில், மானிப்பாய் ஆகிய 8 பிரதேசங்களில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த தற்காலிக ஊழியர்களுக்கு இந்த...

யாழ்ப்பாணம் வல்லிக்குறிஞ்சி முராலி பிள்ளையார் கோவிலுக்கு அருகில், தலை சிதைவடைந்த நிலையில் ஆணொருவரின் சடலம், செவ்வாய்க்கிழமை (27) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். துன்னாலை வடக்கு போதனாமடம் பகுதியை சேர்ந்த சரவணமுத்து சந்திரமோகன் (வயது 46) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் உழவு இயந்திரத்தின் சில்லின் அடையாளம் காணப்படுவதுடன், சிறிது தூரத்தில்...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகித்தவரும் அவ்வியக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என்று கூறப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி) கைது செய்வதா அல்லது விசாரணைக்கு உட்படுத்துவதா என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தாக்கல் செய்யப்பட்ட...

இலங்கையில் ஒருபோதும் இராணுவ அதிரடிப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற தான் முயற்சிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாகக் கூறியுள்ளார் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்லில் தோல்வியடைந்த பின்னர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முயன்றதாக தன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என்று அவர் வெளியிட்டுள்ள தன்னிலை...

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதியிலிருந்து, பஸ்களுக்கான கட்டணங்கள் குறைக்கப்படும் என்று பொது போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மதுமபண்டார தெரிவித்துள்ளார். இந்த கட்டணங்கள் 8-10 சதவீதத்துக்கு குறைக்கப்படும் என்றும் ஆகக்குறைந்த கட்டணம் 1 ரூபாவால் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மா, சீனி, பால்மா உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசாங்கம் தனது இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதனூடாக அத்தியாவசிய பொருட்களுக்கு விலைக்குறைப்பு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வர்த்தகர்கள் இவ்வகையான உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்வதை இடை...

இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளவர்கள், இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் இடர்பாடுகளைக் களைந்து அதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண...

எமது பிரதேச வளங்கள் சட்டவிரோதமாக சூறையாடப்பட்டு வருவதை ஒருபோதும் எங்களால் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ்.வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் தடை அனுமதியையும் மீறி மகேஸ்வரி நிதியத்தினர் மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட முனைந்த போது, இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு...

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாடு செய்ய இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பொதுமக்களுடன் திங்கட்கிழமை (26) சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். ஆலயத்துக்கு சென்ற விஜயகலா, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டார். கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன்...

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வருகை தந்த உயர்மட்டக் குழுவினர், சுன்னாகம் மின்சார நிலையத்துக்கு திங்கட்கிழமை (26) விஜயம் செய்து எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். சுன்னாகத்தில் அமைந்துள்ள நொர்தன் பவர் நிறுவனத்தால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெயால், சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு...

All posts loaded
No more posts