யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரின் விரைவான செயற்பாட்டால் நூற்றாண்டுகள் பெறுமதியான மரம் காப்பற்றப்பட்டது. அத்துடன் அயலில் இருந்த வீடுகளுக்கு ஏற்படவிருந்த பெரும் சேதமும் தவிர்க்கப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை 4 மணியளவில் நல்லூர் கற்பகப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் இருந்த மகோகனி மரமே எரியுண்டது.
மரத்துக்கு அண்மையாக குப்பைகளைப் போட்ட சிலர் அதை எரியூட்டி சென்றனர் இதனாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டது. இது குறித்து அயலவர்கள் தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவித்தனர். அவர்களின் விரைவான செயற்பாட்டால் சுமார் 60 அடி உயரம் கொண்ட நூற்றாண்டுகள் கொண்ட மரம் காப்பாற்றப்பட்டது. அத்துடன் அயலில் இருந்த வீடுகளுக்கு ஏற்படவிருந்த சேதமும் தவிர்க்கப்பட்டது.