Ad Widget

சமூக சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சமூக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (20) ஆளுநர் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தொண்டர்கள் கடந்த 4 தினங்களாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (20) ஆளுநர் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆளுநருக்கு மகஜர் ஒன்றிணையும் கையளித்தனர்.

குறித்த தொண்டர்கள் 5 வருடம் தொடக்கம் 15 வருடங்கள் கடமையாற்றியிருக்கின்ற போதும் அவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படாத நிலையில் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு சேவையாற்றி வருகின்றனர். குறித்த 6 ஆயிரம் ரூபாய் சம்பளமும் கடந்த வருட இறுதியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறும் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறும் கோரி கடந்த 4 தினங்களாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக குறித்த தொண்டர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் வெள்ளிகிழமை (20) ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Posts