Ad Widget

பல்கலையின் பேரணிக்கு முழு ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஏற்கனவே திட்டமிட்டபடி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் வெளியிட வேண்டும் எனக்கோரி யாழ்.பல்கலைக் கழகச் சமூகம் நடத்தும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கவுள்ளது என்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை. சேனாதிராசா அறிவித்துள்ளார்.

mavai

இந்தப் பேரணியில் அனைவரையும் அணி திரண்டு ஐ.நா. அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துமாறு அவர் கோரியுள்ளார். இலங்கையின் இறுதிப் போர் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் சபை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என்றும், அதனை ஒரு போதும் ஒத்திவைக்கக் கூடாது என்றும் கோரி நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி ஒன்று நடை பெறவுள்ளது.

யாழ். பல்கலைக் கழகச் சமூகத்தின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி நடைபெற ஏற்பாடாகி யுள்ளது. இந்தப் பேரணிக்கு பல்வேறு அமைப்புக்களும் தமது ஆதரவை வழங்கியுள்ளன.

இந் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பேரணிக்கு தனது முழு ஆதரவை வழங்குவ துடன் தமிழ் மக்கள் அனைவரை யும் இதில் அணி திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா. அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐ.நா. பொதுச் செயலருக்கும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கும் ஏற்கனவே கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அதே கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழகச் சமூகம் முன்னெடுக்கும் இந்தப் பேரணிக்கும் ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை. சேனாதிராசா குறிப்பிட்டார்.

Related Posts