- Monday
- December 8th, 2025
இலங்கை கடல் எல்லையைத் தாண்டி தமிழக மீனவர்கள் வருவதைத் தடுப்பதற்கு எமது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட கடல்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் தலைவர் சு.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். கடற்தொழிலாளர் சங்கத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழக மீனவரின் இழுவைப்படகுகளால் எமது...
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தினால் இவ்வாண்டும் 'அறிவு மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக உற்பத்தி திறனை மேம்படுத்தல்' என்னும் தொனிப்பொருளிலான சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆய்வரங்கிற்கான ஆக்கங்கள் யாழ் பல்கலைக்கழகத்தினால் கோரப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் முகாமைத்துவ...
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் புதிய இராணுவத் தளபதியாக கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 21ஆவது தளபதியாக இவர் நியமனம் பெறுகிறார். இதுவரை இராணுவத் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு பதிலாக இவர் நியமனம்...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டம் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக செல்லும் வீதியில் வியாழக்கிழமை (19) மாலை கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியதில் கோப்பாய் பகுதியை சேர்ந்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்...
இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான சட்டமூலம் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், போர்...
மாவீரர் குடும்பங்கள்,முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டமானது வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் வரவு -செலவுத்திட்ட அமர்வின் போது அமைச்சர் டெனீஸ்வரனால் குறித்த கொள்கைத் திட்டம்...
புதிய அரசின் இடைக்கால வரவு - செலவு திட்டத்தில் விலை குறைப்பு செய்யப்பட்ட சிமெந்து உட்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலைகளையும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வர்த்தமானியில் பிரசுரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நேற்று (19) நள்ளிரவு இந்த அறிவித்தல்கள் அனைத்தும் இன்றைய வர்த்தமானியில் உள்ளடங்கும் வகையில் உள்வாங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து விலை குறைப்பு செய்யப்பட்ட...
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை அறிக்கையை மார்ச் மாத ஜெனிவா அமர்வில் சமர்ப்பிக்காமல் செப்டெம்பர் மாத அமர்வு வரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் - ஹுசைன் ஒத்திவைத்துள்ள நிலையில், அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. அடுத்த மாதம்...
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையிலுள்ள கோட்டா முகாமில் வெளியுலகத் தொடர்புகள் அற்ற நிலையில் 700இற்கும் மேற்பட்டோர் தடுத்துவைக்கப் பட்டுள்ளனர் என்ற தகவலை நாடாளுமன்றில் வெளியிட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இந்தக் 'கோட்டா' முகாம் தொடர்பில் உடனடி விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டுமெனவும் கூட்டமைப்பு வலியுறுத்தியது. நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர், சாட்சிகளுக்கான உதவி மற்றும் பாதுகாப்புத் தொடர்பான...
போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் பிரேதத்துடன் சென்ற மேளத்தை தமக்காக அடிக்குமாறு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மரண வீட்டுக்கு சென்று தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் குழுவைச்சேர்ந்த இளைஞனை வாளுடன் பிடித்து மக்கள் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். இந்த விசித்திரமான சம்பவம், யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியிலேயே...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர் அட்டை உள்ளவர்களில் 2500 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டையில்லை என கபே அமைப்பு சுட்டுக்காட்டியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு, கரைத்துறைபற்று இரு பிரதேசங்களிலும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. எனினும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களில் 2500 பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என கபே அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு...
தனியார் துறைகளின் சம்பளத்தை 15 -35 சதவீதமாக அதிகரிக்க சம்பள நிர்ணய சபை இணக்கம் தெரிவித்துள்ளது. சம்பள நிர்ணய சபை , தொழிற்சங்கங்கள் என்பவற்றுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நேற்று (19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்...
100 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து படகு மூலம் மாதகல் கடல் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கைமாற்றும் வேளையில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நால்வருடன் 100 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் வருகை தந்த முச்சக்கர வண்டி ஒன்றும் படி ரக வாகனம்...
ஐ.நா சபையில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பிலான அறிக்கை பிற்போடப்பட்டமைக் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் திட்டமிட்டபடி இடம்பெறும் என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த போராட்டம் தொடர்பில் பொது அமமைப்புகளுக்கும் ஆசிரியர் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ். பல்கலைக்கழகத்தின் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட ஆசிரியர்...
சட்டவிரோதமாக படகுமூலம் ஆஸ்திரேலியா சென்ற நான்கு இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்னளர். கடந்த 9ஆம் திகதி கோகஸ் தீவுக் கடற்பரப்பில் வைத்து தடுத்துநிறுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட இவர்கள் அடுத்த நாள் திருப்பிஅனுப்பட்டனர் என்று ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிகாரிகளுடன் இணைந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
சாதாரண மக்களின் நலனை கருத்திற்கொண்டு, வெளிநாடுகளில் இருந்து அனுப்பிவைக்கப்படும் பரிசுப்பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று கையளிக்கும் புதிய முறையை சுங்கத்திணைக்களம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் ஜகத் டி வீரவர்த்தன தெரிவித்தார். கொழும்பிலுள்ள சுங்க தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இம்முறையை...
இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான அறிக்கை காலம் தாழ்த்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் வெளிவரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு...
கரவெட்டி பகுதியில் மர்மபொருள் வெடித்ததில் அப்பகுதியைச் சேர்ந்த தியாகராஜா கோமளா (வயது 36) என்ற பெண் காயமடைந்து செவ்வாய்க்கிழமை (17) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் புதன்கிழமை (18) தெரிவித்தனர். குறித்த பெண் வயலில் வேலை செய்து விட்டு ஓய்வெடுப்பதற்காக அருகிலிருந்த பற்றைப்பகுதியில் அமர்ந்த போதே, குறித்த மர்மப் பொருள் வெடித்துள்ளது. இது...
வேகமாக விரைந்த மோட்டார் சைக்கிள் வீதியிலிருந்து விலகி தூணுடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். இதில் ஒருவர் அபாயகட்டத்தில் இருக்கிறார். நேற்று புதன்கிழமை மாலை 4.45 மணியளவில் இளவாலை விளானுக்கு அண்மையாக இடம்பெற்றது. இந்த விபத்தில் மாவை கலட்டியைச் சேர்ந்த இ.மிகுந்தன் (வயது 26), பருத்தித்துறையைச் சேரந்த கெ.பிரசாந் (வயது 24) ஆகியோரே படுகாயமடைந்தனர். இருவரும் தெல்லிப்பழை...
தென்னிந்திய சினிமாவில் விஜய்யின் நடனத்திற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அந்த வகையில் இவர் நடித்து வரும் புலி படத்தில் ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். இப்பாடலில் ஜில்லா, வீரம் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த வித்யுராமனும் இடம்பெறுகிறார். இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் ருசிகர தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.இதில் ‘விஜய்யின் நடனத்தை...
Loading posts...
All posts loaded
No more posts
