Ad Widget

வடக்கிற்கு இன்று வரும் ஐ.நா. குழு! – ஆளுநர், முதல்வருடன் சந்திப்பு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது செப்டெம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ள நிலையில், நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் கொழும்பு வந்த ஐ.நா. பேரவையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை வடக்கிற்கு வருகின்றனர்.

feltman-UN

இங்கு வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ். பலிஹக்கார, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சிவில் சமூகத்தினரை இந்தக் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

நேற்றுமுன்தினமும் நேற்றும் கொழும்பில் தங்கியிருந்த இந்தக் குழுவினர், இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அரசின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து ஐ.நா. விசாரணை அறிக்கை, புதிய அரசின் உள்ளகப் பொறிமுறை தொடர்பில் விரிவான பேச்சு நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐ.நா. பேரவையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனுக்குஅறிக்கையிடுவதற்காக, அவரின் அலுவலகத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு அதிகாரிகளும் நல்லூரில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தனர்.

Related Posts